1915- முதலாம் உலகப்போரில் கிழக்கு முன்னணியில் இருக்கும் படையின் அதிகாரத்தை ஜார் மன்னர் எடுத்து கொள்வதாக உத்தேசித்திருந்தார். வெளிப்படையாக இந்த முடிவின் பின்னணியில் இருந்தது ரஸ்புடின் என கூறப்படுகிறது. ஜார் மன்னரை அப்புறப்படுத்தி பிறகு ஜார் அரசியின் மூலம் ரசியாவை ஆளலாம் என்ற ஒரு எண்ணம் எனவும் அதக்கேற்றார் போலவே ஜார் அரசி ரசுபுடின் வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு செயலாற்றினார். ரஸ்புடின் அரசவையில் மிகுந்த செல்வாக்கு பெற்ற ஒரு தனிமனிதாக விளங்கினார் எதிர்ப்பவர்களை காணமல் போகசெய்வும் விரும்புவர்களை உயர்த்தும் அளவுக்கு அரசு மற்றும் அரசவையில் அவர் செல்வாக்கு இருந்தது.
உயர்ந்த ரஸ்புடினின் செல்வாக்கு சிலருக்கு எரிச்சலை தந்தது, அதே சமயம்
இளவரசர் யுசுபோவ் |
ரஸ் புடினின் பிடியில் இருக்கும் அரசியரையும் அரச குடும்பத்தையும் காப்பாற்ற சிலர் ரஸ்புடினை கொன்றொழிக்க திட்டமிட்டனர். அந்த நாளும் வந்தது. டிசெம்பர் மாதம் 16 தேதி 1916 ஆண்டு இளவரசர் யுசுபோவ் தனது இல்லத்தில் நடைபெறும் விருந்திற்கு ரஸ்புடினை அழைத்திருந்தார்.அது விருந்து போல தோற்றமிருந்தாலும் உண்மையில் அங்கே அனைவரும் காத்திருந்தது ரஸ்புடின் மரணத்தை காண. இளவரசர் யுசுபோவும் ஏனைய சதி ஆலோசகர்களும் ரஸ்புடினை கொள்வது ஒன்றே அனைத்திற்குமான தீர்வு என்றும் ரச்புடினுக்கு உணவில் விஷம் கலந்து கொடுப்பது என்றும் திட்டமிட்டு இருந்தனர்.
திட்டப்படியே விஷம் கலந்த கேக்குகளை இளவரசர் யுசுப்போவ் ரஸ்புடினுக்கு பரிமாறினார் ஆனால் அந்த விஷம் ரஸ்புடினை ஒன்றும் செய்யவில்லை, போதாக்குறைக்கு மீண்டும் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்தனர் விஷத்தின் பாதிப்புகள் எதுவும் தெரியவில்லை, ரஸ்புடினை விஷம் பாதிக்கவில்லை, நேரம் நேரம் செல்ல செல்ல எரிச்சலைடந்த யுசுபோவ் ரஸ்புடினை சுடுவதன் மூலம் கொள்ளலாம் என முடிவு செய்து ரச்புடினின் பின்புறத்தில் இருந்து சுடுகிறார். ரஸ்புடின் கீழே கிடக்கிறார் இளவரசர் யுசுபோவ் ரச்புடினின் பிணத்தருகே சென்று குனிந்து காணும் போது எவரும் எதிர்பாரா சட்டென துள்ளி எழும் ரஸ்புடின் தன கால்களால் யுசுபோவை தாக்குகிறார்.சுதாரித்த யூசுபோவ் ரஸ்புடினிடமிருந்து தப்பி மாடிப்படிகளில் ஓடுகிறார் , அப்பொழுது ரஸ்புடினை நோக்கி நான்கு முறை யூசுபோவ் சுடுகிறார் இதில் இரண்டு குண்டுகள் தவறினாலும் இரண்டு தோளிலும் தலையிலும் காயமுண்டாக்குகிறது ரஸ்புடினால் எழ முடியவில்லை எனினும் ரஸ்புடின் சாகவில்லை பற்களை கடித்து கொண்டு இருக்கிறார் , தனது குழுவினருடன் இணைந்து யூசுபோவ் ரத்தம் வருவரை கொடுராமான முறையில் தாக்கியும் ரஸ்புடின் இறக்கவில்லை, ரச்புடினி கை கால்களை கட்டி கனமான போர்வையில் சுற்றி அதிகாலை நேரத்தில் சதி ஆலோசகர்கள் அவரது உடலை ஆற்றில் வீசி சென்றுவிட்டனர்.ரஸ்புடின் வீடுதிரும்பாமை அவரது உறவினர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது மேலும் போயல்சாரின் விசாரணையில் டிசெம்பர் மாதம் 19 தேதி நிவேதா ஆற்றின் உறை பணியில் ரஸ்புடின் உடல் கண்டெடுக்க படுகிறது. ரஸ்புடினி பிரேத பரிசோதனை தரும் ஆச்சர்ய மிக்க முடிவுகள் சில
- மதுவில் விஷம் இருந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை
- மூன்று குண்டுகள் உடலில் கண்டெடுக்கப்பட்டது முதலாம் குண்டு வயிற்றுபகுதியையும் கல்லீரலும் தாக்கப்பட்டது, இரண்டாம் குண்டு சிறுநீரக பகுதியை தாக்கி இருந்தது, மூன்றாம் குண்டு மூளை பகுதியில் காயத்தை ஏற்படுத்தி இருந்தது.
- அவரது நூரையிரல் பகுதியில் நீர் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.(இதன் மூலம் ரஸ்புடின் நீரில் மூழ்கியும் உயிருடன் இருந்தார் என்றும் சிலர் கூறுகின்றனர்)
தீர்க்க தரிசன கடிதம்