அமானுஷ்யம்

Monday, September 19, 2011

அமெரிக்க டாலர் விசித்திர குறியீடுகள்





 மேலும் சில ரகசியங்கள் டாலரின் இடது புற மேல்பகுதியில் காணப்படும் சிலந்திவலை போன்ற ஒரு வடிவியல் வடிவத்தில் ஒன்று ஏன் சற்று விலகியது போல தோன்றும் ,இந்த வடிவமைப்பை சிலந்தி வடிவமைப்பு அல்லது ஆந்தை போல தோற்றமளிக்கும் வடிவமைப்பின் த்ர்ச்செயல் நிகழ்வாக தோன்றும் ஆனால் அவை திட்டமிடப்பட்ட ஒரு வடிவமைப்பே ஆகும்.
டாலரினை பின்பகுதி திருப்பி காணும்பொழுது அதில் சிலந்தி வலை தெளிவான முறையில் தெரியும் ஆனால் சற்று சைவக திருப்பி காணும் பொது குருத்தேளும்பும்களும் கடற்கொள்ளையர்களின் சின்னமான மண்டையோடும் அதில் காணப்படும்.
அது மட்டுமின்றி அமெரிக்க டாலர்கள் பழங்கால சக்தி மிகுந்த குறியீடுகளுடன் வடிமைக்கபட்டுள்ளது,இதனையும் சற்று காண்போம்.டாலரின் சில பெரிது படுத்தப்பட்ட சில புகைப்படங்கள் இதனை நமக்கு வெளிப்படுத்துகின்றன, இதனை சிவ ரகசியம் என கூறலாம்  , டாலரின் அடிப்பகுதியில் காணப்படும் வலை மற்றும் சுழல் அமைப்பில் மிக தெளிவாக சிவா பெருமானின் உருவம் வடிமைக்கபட்டுளது,சிவன் இந்து மத நம்பிக்கைகளின் பட்டி தீமையை அழிக்கும் கடவுள் ,மற்றும் அவரே பரப்ரம்மாக கருதப்படுகிறார்.   

 அமெரிக்க  டாலர்கள் மட்டுமல்ல வேறு சில வியாபார நிறுவனங்களும் கூட தங்கள் நிறுவன குறியீடுகளில் இத்தகைய ரகசியம் உள்ளது , ஐரோப்பிய இருசக்கர வாகன நிறுவனத்தின் குறியீடு கிழே நீங்கள் காண்பது 
 
ஆனால் இதன் மூலம் குழந்தையை உண்ணும் ஒரு பாம்பின் சித்திரத்தில் இருந்து எடுக்கப்பட்டது, நமது நாட்டின் பிரபலமான கைபேசி 
நிறுவனம்வோடபோன் இதன் குறியீடு 
                                                
மூன்று ஆறு 666  கிறித்துவ நம்பிக்கை படி தீய எண்ணாக கருத்தபடுகிறது ஆனால் வோட போன் தனது விளம்பரங்களில் இந்த மூன்று ஆறு குறியீடுகளை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது மேலும் ரத்த சொட்டு போல காணப்படும் குறியீடுkkk klu  klax  klan  என்ற ரகசிய சங்கத்தின் இருப்பது போல காட்சி அளிக்கிறது கவனியுங்கள் 

                                                    

  இவை மட்டுமல்ல இன்னும் நிறைய நிறுவனங்களின் குறியீடுகளில் இவை போன்ற விசித்திர செய்திகள் உள்ளன. பிறகு அது பற்றி பார்ப்போம்

Monday, September 12, 2011

அமெரிக்க டாலரில் சில வித்தியாசாமான குறியீடுகள்

அமெரிக்க டாலர்களில் அந்த நாட்டின் ஏற்பட்ட அழிவை பற்றிய சில வித்தியாசமான குறிப்புகளும் மேலும் சில ரகசிய குறியீடுகளும் கொண்டுள்ளது.இது  போல ரகசிய குறியீடுகளை டாலர் மட்டுமின்றி ரூபாய்கள் மாறும் யுரோக்களில் நாங்கள் தேடிபார்த்தபோதும் அவை பெரிய வெற்றியை தரவில்லை ஆனால்,டாலர்களில் எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது, சில மாத ஆய்வுகளுக்கு பின் டாலர்களில் மறைந்துள்ள  குறியீடுகளை மற்றும் அதன் ரகசியங்களை ஆச்சர்யங்களை எங்களுக்கு வெளிபடுத்தியது, மிக சிறந்த வடிவமைப்பின் பிரதிநிதியாக இந்த டாலர்கள் விளங்குகின்றன என்பதில் சந்தேகமேயில்லை.

௯/௧௧ தாக்குதல் குறித்த முன்னறிவிப்பை வெளிபடுத்தும் டாலர்  
ஜாக்சன் பில் என அழைக்கப்படும் இந்த இருபது டாலர் ௧௯௨௮ இல் முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது ஆனால் நீங்கள் இங்கே பார்ப்பது 2003 இல் அச்சடிக்கப்பட்டது(இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்).


இந்த இருபது டாலர் நோட்டில் பின் வருமாறு செய்தால், அதாவது இதனை சரி பாதியாக மடிக்க வேண்டும் ,பின் வரும் படத்தில் உள்ளவாறு ,

 
பிறகு அதனை அப்படியே 45 டிகிரி கோணத்தில் மடிக்க வேண்டும், எதிர் புறமும் அதே போல மடிக்க வேண்டும், மடித்த பகுதிகளின்   மேற்ப்புரம் உள்ள  கோடு சரியாக இணைய வேண்டும் கீழே  உள்ள படத்தை பாருங்கள்,

 இப்போழு அதில் காணப்படும் படம் என்னவென்று தெளிவாக புலப்படும்ஒரு கட்டிடமானது புகை மண்டலத்துடன் காணப்படும் , காட்சி போயிங் விமானம் மூலம் தாக்கப்பட்ட பெண்டகனை குறிப்பது போல இருக்கிறது இந்த புகைப்படங்கள் (யுகத்தின் அடிப்படையில்)


 
பிறகு அதனை பின்புறமாக திருப்பி பார்க்கும் பொது கிடைக்கும் படங்கள் இரட்டை கோபுரம் போன்ற ஒரு கட்டிடமும் அதில் இருந்து புகை வருவது போன்ற ஒரு படம் காணப்படுகிறது.



இவை மட்டுமல்ல தற்பொழுது நாம் மடித்த டாலரின் மடிப்புகளை விடுவித்து பாருங்கள் எட்டு மடிப்பு கோணங்களும் சந்திக்கும் புள்ளி வெள்ளை மாளிகையினை மையமாக கொண்டிருக்கும்,இது பரவலாக பெண்டகன் மற்றும் இரட்டை கோபுரம் இரண்டிற்கும் பிறகு, வெள்ளை மாளிகையே தீவிரவாதிகளின் மூன்றாவது இலக்காக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.  
 

மேலும் சில விஷயங்களை பிறகு  காண்போம் 

Monday, June 27, 2011

அசாத்திய நிகழ்வுகள் அதிசய மனிதர்கள்

சில விஷயங்கள் சில மனிதர்கள் வரலாற்றை பொறுத்தவரை அதிசயமாகவும் அற்புதமாகவும் நமது சிந்தனைக்குஅர்பாற்பட்டதாக இருந்தவர்களை இருப்பவர்களை பற்றி சற்று காண்போம்

பச்சை நிற குழந்தைகள்

ஆம் ஸ்பெயினின் பான்ஜோஸ் நகரத்தினருகே 1887 ஆம் ஆண்டு அங்கே இருந்தவர்கள் ஒரு குகையின் வாயிலில் இரண்டு சிறார்கள் பெற்றோரின்றி தனியே அழுது கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த சிறார்களின் மொழி அவர்களுக்கு புரியவில்லை நிச்சயமாக அவர்கள் ஸ்பானிஷ் மொழி பேசவில்லை எனபது அவர்கள் அறிந்து கொண்டனர் மேலும் அந்த சிறார்களின் தோல் நிறமானது பச்சை வண்ணமாக இருந்தது அவர்களுக்கு மேலும் ஆச்சர்யத்தை கொடுத்தது

பிறகு இரண்டு சிறார்களும் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நாட்களில் ஒரு சிறுவன் உணவு எதையும் உன்ன மறுத்த நிலையில் மரணமடைந்தான் .மற்றொரு சிறுமி வெகு காலம் கழித்து சாப்னிஷ் மொழியினை அறிந்த பிறகு தனது பூர்விகத்தை பற்றி கூறியது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அந்த பச்சை சிறுமி தங்கள் இருந்த இடத்தில் சூரியன் கிடையாது என்றும் அங்கே நிரந்தமான மெல்லிய ஒளி இருக்கும் என்றும் ஒரு பெரு வெடிப்பு ஒன்றை கேட்டதாகவும் ஏதோ விவரிக்க முடியாத ஒன்று தன்னையும் தனது சகோதரனையும் இந்த குகைக்குள் தள்ளியதாக தெரிவித்தாள். இன்னும் புரியாத புதிரான விஷயங்களில் இதும் ஒன்று

இரண்டு சிறுவர்களையும் குறிக்கும் நினைவு சின்னம்

நெருப்பு மனிதன்

இத்தாலியை சேர்ந்த பெனடேட்டோ அதிசய மற்றும் ஆபத்து நிறைந்த அமானுஷ்ய சக்திகள் மூலம் பிரபல்யமாக ஆரம்பித்தார் . பென் தனது பார்வையின் மூலமே நெருப்பினை ஏற்படுத்தும் சக்தியை கொண்டிருந்தார். பென் பார்வையின் மூலமே நெருப்பினை ஏற்படுத்துவதற்கு மேலாக தனது வருகை நிகழும் இடாங்களில் நெருப்பினை உண்டாகும் அசாத்திய சக்தியை கொண்டிருந்தார். 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக பெனின் இந்த அதிசய நெருப்பு தன்மை ஒரு பல் மருத்துமனையில் வெளிப்பட்டது, வரவேற்ப்பரையில் அமர்ந்து காமிக் புத்தகத்தினை பென் படித்து கொண்டிருந்தபோது அந்த புத்தகம் எந்த வெளி தூண்டுதல் காரணம் இன்றி பற்றி எரிந்தது .பிறகு ஒருநாள் காலை தனது படுகையில் பற்றிய நெருப்புடன் உடல் மற்றும் உடை எறிந்த நிலையில் மீட்கப்பட்டான் பென் .மற்று மொரு முறை பெனின் உறவினர் கையில் இருந்த பிளாஸ்டிக் பொருளை , பென் பார்த்த போது எரிந்து பொசுங்கியது.பென் செல்லுமிடங்கள் பார்க்குமிடங்களில் தோறும் காகிதங்கள் மரபொருள்கள் புகைந்து எரிய தொடங்கியது. மேலும் அவ்வாறான சமயங்களில் பென்னின் கைகள் ஒளிர்ந்ததாக கூறுகின்றனர் சாட்ச்சியாளர்கள். பென்னும் அசாத்திய மனிதர்களில் பென்னும் ஒருவர்.

Tuesday, June 21, 2011

ஷம்பலா மர்மங்கள்


விக்டோரியா லேபெஜ் ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஷம்பலாவை பற்றி ஆய்வு செய்தற் தனது ஆய்வு புத்தகத்தில் கூறுகிறார். துணிவற்ற நவீன சமுகத்திற்கு இந்த மண்டலத்தினுடைய ஆணை தேவை எனவும் மண்டலா(பிரபஞ்சத்தின் ஒரு வரைபட அமைப்பு ) ஒழுங்கற்ற சுருள் போன்ற பிரபஞ்சத்தின் மையம் என கூறும் அவர் மேலும் ,இந்த மையத்தினை தேடி தொடர்வது மூலம் ஷம்பலாவினை அடையலாம். மேலும் ஷம்பலா உலகத்தின் அச்சு என கூறும் இந்த ஆய்வாளர் .இங்கே நாம் அறிய முடியாத அளவில் பல ரகசியங்கள் நிறைந்து இருக்கலாம் என கூறுகிறார். அருங்காட்சியகம் நூலகம் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு பிந்தைய தொழில் நுட்பம், மேலும் சீனர்களின் அறிவிதிறன்படி பிரபஞ்ச கோள்களுக்கு பயணம் செய்ய புதிய வாகனங்கள் ,மற்றும் பிற கிரஹங்களில் வசிப்பவர்களை கண்டறிய உதவும் புதிய வசதிமிக்க தொழில் நுட்பங்கள் இருக்குமென்று கூறுகிறார் . இவைகள் வெறும் ஒரு மதம் சார்ந்த கற்பனை என நாம் புறந்தள்ளி விடலாம் .ஆனால் புதிய நிலம் மற்றும் நாடுகளை கண்டறியும் ஒருவர் பற்றி தன் அனுபவங்களை முன் வைக்கிறார் .


ரஷியாவை சேர்ந்த நிக்கோலஸ் ரோறிச் இவர் பன்முகம் கொண்ட ஒரு மனிதர் நடிகர் கவிஞர் மேலும் தியோசொபிகல் சமுகத்தின் முக்கிய அங்கத்தினரும் கூட
1923 முதல் 1928 வரை இவர்கள் 15500 மைல்கள் 35 நாடுகளின் உயர்ந்த மலை பகுதிகளை கடந்தார்கள் கோபி பாலைவனம் முதல் அட்லாய் மலை வரை 1924 ஆன் ஆண்டு இந்திய மலை பயணங்களை ரோறிச் தன் குழுவினருடன் மேற்கொண்டார்.ரோறிச் தனது பயணத்தின் போது ஷம்பலாவை பற்றி அறிய நேர்ந்தது.

தனது பயணத்தின் போது ரோறிச் ஷம்பலாவை பற்றிய தனது எண்ணங்களை குறித்து வைத்து கொண்டார் பின்னலில் மிக பிரசித்தி பெற்ற நூலாக விளங்கியது அவருடைய குறிப்புகள் அதன் பெயர் altai-himalaya:a travelors guide

ரோறிச் இந்த புத்தகத்தில் ஒரு வினோத சம்பவத்தை விவரிக்கிறார். ரோறிச் தனது பயணத்தை அல்டாய் பயணத்தை முடித்து கொண்டு திரும்பிய பின் ஒரு வெள்ளை தூண் ஒன்றினை நிறுவி அத்தனை ஷ்மபலாவிற்கு அர்ப்பணம் செய்கிறார்.ஆகஸ்ட் மாதம் வெள்ளை தூண் ஷம்பலாவிற்கு அற்பணிக்கபடும் புனித சடங்குகளை செய்ய குறிப்பிட தக்க எண்ணிகையிலான லாமா துறவிகள் கலந்து கொள்கின்றனர் ஒரு மங்கோலிய குழுவின் தலைவர் வர இருக்கும் நாளில் இது குறித்து நல்ல செய்தி அல்லது சூசகமான தகவல் கிடைக்கும் என கூறுகிறார். அவர் கூறிய ஒரு அல்லது இரண்டு நாட்களுக்குள் ஒரு பெரும் கருப்பு பறவை ஸ்தூபிக்கு மேலாக பறந்து அம்பினை போல சூரியனை நோக்கி பாய்ந்து தங்கமென மின்னி எல்லோர் பார்வையும் அதன் மீது இருக்கும் போது சட்டேனே பார்வையில் இருந்து தப்பிய பறவையினை தொலைநோக்கி மூலம் கண்டபோது அட்லாயின் திசையிலுருந்து தென்மேற்கு பக்கமாக பறந்து ஹம்போல்ட் மலையின் பின்புறமாக சென்று மறைந்தது அதாவது ஷம்பலா திசையில் ,இது குறித்த ரோரிசிடம் லாமா ஒருவர் ஷம்பலாவின் கடவுளின் ஆசிர்வாதம் என கூறினார். மேலும் ஒரு ஆச்சர்யமான விஷயம் நமது மஹா விஷ்ணுவின் அவதாரமான கல்க்கி தீமைகளை அழித்து பின் ஷாம்பலில் அரசாள்வர் என கூறப்படுகிறது ஷம்பலா இன்னும் ஏரளாமான ஆச்சர்யங்களை கொண்டு உள்ளது .ஷம்பலாவின் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் என திபெத்தில் பதினான்கு வருடங்கள் ஆய்வு பணி புரிந்த டேவிட் ஒ நில் எனும் பெண் கூறுகிறார் இமயமலை சாரலில் தான் கண்ட அந்த மனிதன் அமைதி தவழும் முகத்துடனும் வானுக்குள் அப்பாலுள்ள பொருள்களை காண்பனை போல கூறிய விழிகளுடன் காணப்பட்டதாகவும் அவனுடைய நடை பாய்ச்சல் போல அதே சமயம் பூமியில் கால் வைக்காமல் பறந்து செல்லும் ஒருவனை போல பெண்டுலம் அசைவதை போல சீரான இடைவெளியில் நடந்து சென்றதாக கூறுகிறார்.பல ஆச்சர்யங்களை கொண்ட ஷம்பலவை இன்னும் தேடி கொண்டே இருக்கின்றனர் .

Saturday, June 18, 2011

எங்கே இருக்கிறது ஷம்பலா

ஷம்பலா பனி படர்ந்த திபெத்திய மலைகளுக்கு அப்பால் எவரும்நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் அழகிய சொர்க்கமே ஷம்பலா. தூய உள்ளம் கொண்டவர்கள் வாழும் ஷம்பலாவில் மகிழ்ச்சி மட்டுமே உண்டு .அங்கே இருப்பவர்கள் என்றென்றும் இளைமையுடன் நோய் என்ற ஒன்றை அறியாதவர்களாக இருப்பார்கள். மேலும் அன்பும் ஞானமும் மட்டுமே பின்பற்றப்படும். அநீதி அங்கே அறியப்படாத ஒன்று மிக அழகான முறையில் மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்ளும் அவர்கள் அசாத்திய சித்திகளை கொண்டவர்களாக வெளி உலகத்தை விட பன்மடங்கு சிறந்த மனிதர்களாக ஞானமுடையவர்களாக இருப்பார்கள் .ஷம்பலா என்பதன் பொருள் மறைவான எனபது , பலரும் ஆன்மீகவாதிகள், கண்டுபிடிப்பாளர்கள் ,என ஷம்பலாவை கண்டுபிடிக்க முயன்ற போதும் அவர்களால் சிறு புள்ளியை கூட கண்டுபிடிக்க இயலவில்லை, எனினும் அவர்கள் கூற்றுப்படி ஷம்பலா இன்னும் இருக்கிறது. மானுடம் காணவியலா உலகின் ஏதோ ஒரு விளிம்பு பகுதியில், இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான ஸ்தூலஇணைப்பாக உள்ளது .

திபெத்திய புத்த பாரம்பரியத்தில் புராண நகரமான ஷம்பலா, ஆசியாவில் உள்ளார்ந்த பகுதியில் மறைந்துள்ளதாக நம்பப்படுகிறது .ஷம்பலா பற்றி புராதன நூல்களான காலசக்ர தந்த்ரம், மற்றும் ஜாங் ஜுங் கலாச்சாரத்திலும் திபெத்தின் இந்த நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன .திபெத்தியர்களின் போண் கல்வெட்டுகள் ஷம்பலவை பற்றி மேலும் அதிக விஷயங்கள் கூறுகின்றன.ஷம்பலவின் வரலாறு எதுவானபோதும் இந்த நகரம் புத்த பிக்குகளின் தூய பகுதி, இந்த அற்புதமான நகரம் . இதனை பற்றி அறிந்தவர்கள் பயணிகள் என அனைவரையும் இந்த ஷம்பலா ஈர்த்து கொண்டு இருக்கிறது .ஷம்பலா என்பதன் சம்ஸ்கிருத அர்த்தம் சாந்தத்தின் உறைவிடம் அல்லது அமைதியான இடம் என்பதாகும், ஷம்பலாவின் உண்மையான இருப்பிடம் இதுவரை கண்டறியப்படவில்லை, மேலும் ஷம்பலாவினை எட்டு பெரும் மதங்கள் இருப்பதாக கூறுகின்றன . இந்த பிரபஞ்சத்தின் ஆத்மீகத்தின் மைய இடமாக இருப்பது இந்த ஷம்பலா என கூறப்படுகிறது .

மேலும் இதனை பற்றி கூறும்போது இங்கு வசிப்பவர்கள் தங்களுக்குள் சிறுகுழு ஒன்றை ஏற்படுத்தி கொண்டு. மனிதர்களுக்கு எல்லா காலங்களிலும் உதவி புரிகிறார்கள். பலநூறு மைல் தூரத்திற்கு வலை பின்னல் அமைப்பு கொண்ட துளைத்த பாதைகள் மூலம் ஷம்பலா புவிபகுதிக்கு மேலும் கீழும் இணைந்து உள்ளது .ஆண்ட்ரீவ் தாமஸ் தனது ஷம்பலா நூலில் அவர்களின் ரதங்கள் ஒளிமையமாகவும் தனித்த வடிவமைப்புடன் காணப்படுவதாக கூறுகிறார். அதுமட்டுமின்றி அவர்களின் செயற்கை ஒளி ஷம்பலாவில் காய் கறிகள் மாற்றிய உணவு பண்டங்களை உற்பத்தி செய்ய போதுமான அளவில் உள்ளதாகவும், இந்த உணவு பொருள்களின் மூலமே அவர்கள் நீண்ட நாள் நோயற்ற வாழ்வினை பெறுவதாக கூறுகிறார்.

மேலும் பல ஆய்வார்கள் ஷம்பலாவை பற்றி என்ன கூறுகிறார்கள் என பிறகு காண்போம்