ஆனால் எங்களுடைய வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டில் வாசித்த என் உறவுக்கார பெண்ணுக்கு பேய் பிடித்ததாக பேசிக்கொண்டனர் வழக்கம் போல சுரம் அல்லது தலை விரித்து மேட்டு கூரையை பார்த்துக்கொண்டு இருக்கும் என நினைத்து போனேன் ஆனால் நடந்ததோ வேறு படிக்காத அந்த பெண் வெகு சரளமாக ஆங்கிலத்தில் பேசிகொண்டிருந்தார் குரல் அந்த அக்காவினுடயது அல்ல நான்றாக தெரிந்தது கோவிலுக்குள் செல்லும் பொது இயல்பான பெண்ணை மாறிய அவர் வெளியிடங்களில் கல்லூரி பெண் போல நடந்து கொண்டார் பின்னர் மந்திரவாதி (இதையும் நான் நம்பவில்லை )வந்து அந்த பெண்ணின் பூர்வீகம் பற்றி கேட்ட பொது அவர் ஒரு கல்லூரி மாணவி என்பதும் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் பின் அவர் காதலன் செய்வினை மூலம் இங்கே கொண்டு வந்ததாகவும் கூறினார் பின்னர் மந்திரவாதி சில பூஜை செய்து ஒரு பானையில் எலுமிச்சம் பழம் இன்னும் பிற சாமான்கள் வைத்து இதை யாரும் வராத இடத்தில வைத்து பின் திரும்பி பார்க்காமல் வந்து விடுமாறு சொன்னார் அவரு செய்த பின் அந்த அக்கா இயல்பு நிலைக்கு திரும்பினார் இன்னும் எனக்கு ஆச்சரியம் அவர் பேசிய நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் மாறிய குரல் எவ்வளவோ அறிவியல் மாற்றம் வந்த பின்னும் நம் அறிவுக்கு எட்டாத சில உண்டு என்பது உண்மை
3 comments:
உண்மை தான் , அதுவும் நிறையா கிராமங்களில் தான் இப்படி நடக்கின்றன
எங்கள் குடும்பத்திலும் இது போன்று சம்பவம் நடந்துள்ளது...
இது கதையல்ல நிஜம்...
என் தோழி-க்கு இப்படி நடந்து இருக்கு, பெரிய விஷயம் என்னனா தன்னை தானே எரித்து கொண்டார் என் தோழி , பூஜை ,கோவில் என்ன நிறைய விஷயம் பண்ணிய பிறகு பழையபடி இருக்கிறார் , தன்னை அறியாமல் இருக்கும் போது ஆங்கிலம்,கணினி அறிவு என் ரொம்ப திறைமையா இருந்தாங்க , பாவம் எல்லாம் சரி ஆனா பிறகு அவங்களுக்கு எதுவமே தெரியல சந்திரமுகி படம் பார்த்த மாதிரி இருக்கும் எனக்கு ,
Post a Comment