பக்கத்து விட்டில் நடந்த உண்மை , அந்த மாமா கட்டிட மேஸ்திரி அவரது மனைவிக்கு அம்மாவசை அன்று மட்டும் சாமி வரும் , வரும் போது அவுங்களுக்குன்னு ஒரு தனி தட்டு இருக்கும் அந்த தட்டு நெறைய தயிர் சாதம் மற்றும் குட்டி கருவாடு பொருச்சு வைக்கணும்.ஒரு நாள் அவுங்க தங்கைக்கு கல்யாணம் மறுவிடு அழைத்து விருந்து போட்டாங்க. (தங்கை விட்டுக்காருக்கு கருப்பு சாமி வரும்).
அன்று அம்மாவசை அந்த அத்தைக்கு சாமி வந்துட்டது. உடனே எல்லோரும் தயிர் சாதம் மற்றும் கருவாடு ரெடி பண்ண ஆரம்புசுட்டங்க, தங்கை விட்டுக்காறு என்ன என்று கேட்க எல்லோரும் நடப்பதை சொல்ல . அவருக்கு ஒரே சந்தேகம், மாரியாத்தாவுக்கு கருவாட பூஜைய போட ஆரம்புட்சார். விட்டுக்குள் வந்தார் அந்த அத்தை அந்த ஆல வெளிய போக சொல்லுனு கத்துறாங்க, ஊரு காரவுங்க நீ போங்க மாப்பிள மாரியாத்தா கோவத்துக்கு ஆல ஆகதிங்கனு சொல்ல.
அதைக்கு கேட்காமல் போய் நாலு எலுமிச்சை பழத்த வச்சு வச்சு கருப்பு சாமிய மனசுல வச்சுகிட்டு கூப்பிட அந்த அத்தை வரவே இல்ல , மாமா உள்ள போய் முடிய புடுச்சு இழுத்துட்டு வந்து நாலு எலுபிட்சை பழத்துக்கு முன்னாடி உட்கார வச்சு கேட்டா உண்மை முழுதும் வெளி வந்தது. ஊரே அதிரிச்சில மூழ்கியது.
மூணு வருசத்துக்கு முன்னாடி மாமா வீடு கட்டும் போது மாடியில் இருந்து தவறி விழுந்த முருகேஸ்வரி என்ற சித்தாள் பெண் ஆவி தான் இந்த அத்தை உடம்புல இருந்து விளையாடியது என்று அன்று தான் தெரிய வந்தது.
பிறகு அவுங்க உடம்பில் இருந்து அந்த ஆவிய விலக்கி விட்டார்.
No comments:
Post a Comment