அமானுஷ்யம்: 2010

Tuesday, September 14, 2010

சூட்சும உலகங்கள்...


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.

தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),

கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),

வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),

தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),

மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)

ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது. இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.

உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்கவேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?

தொடரும்...

Monday, September 13, 2010

உண்மை காதல்

பெயர் ராதிகா, தன் வீட்டு அருகில் உள்ள பிரகாஷ் என்ற பையனை இரண்டு வருஷமாக இருவரும் விரும்பினார்கள், அந்த பொண்ணு பத்தாவது படித்தால் , இந்த பையன் காலேஜ் முதலாம் ஆண்டு படித்தான், வீட்டில் இருவரின் காதல் தெரிந்தது, இருவரின் வீட்டிலும் பிரச்சனை. சரி படிப்பு முடிக்கட்டும் பார்க்கலாம் என்று சமாதனம் செய்தார்கள். அந்த பொண்ணுக்கு பத்தாவது பரீட்சை முடிந்தது லீவ் விட்டாச்சு. அந்த பொன்னுக்கும் தாய் மாமனுக்கும் கல்யாண பேச்சு வார்த்தை நடந்தது.
இதை தெரிந்து கொண்ட அந்த பொண்ணு தன் காதலனுக்கு விவரத்தை சொல்ல.இந்த விஷயம் கேள்வி பட்ட ராதிகாவின் அப்பா ராதிகாவை போட்டு அடிக்க , தாங்க முடியாமல் தூக்கு போட்டு இறந்து விட்டால். வீட்டில் எல்லோரும் கதறும் சத்தம்.அந்த பொண்ணு இறந்த செய்தி கேட்டு
பையனும் தூக்கு போட்டு இறந்துவிட்டான்.
இவர்கள் இருவரின் அவியும் அந்த தெருவையே ஆட்டி படைத்தது. இரவினுளும் , பகலில் உச்சி நேரத்திலும் மல்லிகை பூவும் சலங்கை சத்தமும் , சிரிப்பு சத்தமும் கேட்டு கிட்டே இருக்கும்.அவுங்க அப்பாவை கழுத்த நெரிப்பது போல் இப்பிடி நெறைய நடந்தன.
இருவரின் குடும்பமும் சேர்ந்து இருவரின் ஆவியையும் கட்டிமறைதனர். இரண்டு உயிர் பிரிந்தன ரெண்டு குடும்பமும் சேர்ந்து செய்த காரியம்.உயிரோடு இருக்கும் போது ரெண்டு குடும்பமும் சேர்த்து வைக்கல , இறந்த பின்பு சேர்த்து வைத்துள்ளன..

தயிர் சாதமும் கருவாடும் கேட்ட மாரியாத்தா

இது ஒரு உண்மை சம்பவம் :-
பக்கத்து விட்டில் நடந்த உண்மை , அந்த மாமா கட்டிட மேஸ்திரி அவரது மனைவிக்கு அம்மாவசை அன்று மட்டும் சாமி வரும் , வரும் போது அவுங்களுக்குன்னு ஒரு தனி தட்டு இருக்கும் அந்த தட்டு நெறைய தயிர் சாதம் மற்றும் குட்டி கருவாடு பொருச்சு வைக்கணும்.ஒரு நாள் அவுங்க தங்கைக்கு கல்யாணம் மறுவிடு அழைத்து விருந்து போட்டாங்க. (தங்கை விட்டுக்காருக்கு கருப்பு சாமி வரும்).

அன்று அம்மாவசை அந்த அத்தைக்கு சாமி வந்துட்டது. உடனே எல்லோரும் தயிர் சாதம் மற்றும் கருவாடு ரெடி பண்ண ஆரம்புசுட்டங்க, தங்கை விட்டுக்காறு என்ன என்று கேட்க எல்லோரும் நடப்பதை சொல்ல . அவருக்கு ஒரே சந்தேகம், மாரியாத்தாவுக்கு கருவாட பூஜைய போட ஆரம்புட்சார். விட்டுக்குள் வந்தார் அந்த அத்தை அந்த ஆல வெளிய போக சொல்லுனு கத்துறாங்க, ஊரு காரவுங்க நீ போங்க மாப்பிள மாரியாத்தா கோவத்துக்கு ஆல ஆகதிங்கனு சொல்ல.

அதைக்கு கேட்காமல் போய் நாலு எலுமிச்சை பழத்த வச்சு வச்சு கருப்பு சாமிய மனசுல வச்சுகிட்டு கூப்பிட அந்த அத்தை வரவே இல்ல , மாமா உள்ள போய் முடிய புடுச்சு இழுத்துட்டு வந்து நாலு எலுபிட்சை பழத்துக்கு முன்னாடி உட்கார வச்சு கேட்டா உண்மை முழுதும் வெளி வந்தது. ஊரே அதிரிச்சில மூழ்கியது.

மூணு வருசத்துக்கு முன்னாடி மாமா வீடு கட்டும் போது மாடியில் இருந்து தவறி விழுந்த முருகேஸ்வரி என்ற சித்தாள் பெண் ஆவி தான் இந்த அத்தை உடம்புல இருந்து விளையாடியது என்று அன்று தான் தெரிய வந்தது.
பிறகு அவுங்க உடம்பில் இருந்து அந்த ஆவிய விலக்கி விட்டார்.மாறிய குரல்

சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன் எனது ஊரில் நடந்த சம்பவம் எனது தெருவை ஒட்டி இருக்கும் பழைய ரயில் நிலையத்தை ஒட்டி கருவ தோப்பு இருந்தது எங்கள் தெரு பெண்களுக்கு அடுப்பெரிக்கவும் வேறு பல காரியங்களுக்கும் அந்த கருவ தோப்பே உபயோகமாயிருந்தது அங்கே சில சமயங்களில் கருப்பு துணி சுற்றிய பானை கள் மற்றும் மரத்தில் முடி வைத்து அடித்த ஆணி போன்றவை தென்படும் அது மட்டுமின்றி ரயிலில் விழுந்து செத்தவர்கள் அங்கே ஆவியாக அலைவதாகவும் சொல்லுவார்கள் ஆனால் வழக்கம் போல நாங்கள் அலைவது திரிவதுமாக இருந்தோம்
ஆனால் எங்களுடைய வீட்டிலிருந்து மூன்றாவது வீட்டில் வாசித்த என் உறவுக்கார பெண்ணுக்கு பேய் பிடித்ததாக பேசிக்கொண்டனர் வழக்கம் போல சுரம் அல்லது தலை விரித்து மேட்டு கூரையை பார்த்துக்கொண்டு இருக்கும் என நினைத்து போனேன் ஆனால் நடந்ததோ வேறு படிக்காத அந்த பெண் வெகு சரளமாக ஆங்கிலத்தில் பேசிகொண்டிருந்தார் குரல் அந்த அக்காவினுடயது அல்ல நான்றாக தெரிந்தது கோவிலுக்குள் செல்லும் பொது இயல்பான பெண்ணை மாறிய அவர் வெளியிடங்களில் கல்லூரி பெண் போல நடந்து கொண்டார் பின்னர் மந்திரவாதி (இதையும் நான் நம்பவில்லை )வந்து அந்த பெண்ணின் பூர்வீகம் பற்றி கேட்ட பொது அவர் ஒரு கல்லூரி மாணவி என்பதும் காதல் தோல்வியில் தற்கொலை செய்து கொண்டதாகவும் பின் அவர் காதலன் செய்வினை மூலம் இங்கே கொண்டு வந்ததாகவும் கூறினார் பின்னர் மந்திரவாதி சில பூஜை செய்து ஒரு பானையில் எலுமிச்சம் பழம் இன்னும் பிற சாமான்கள் வைத்து இதை யாரும் வராத இடத்தில வைத்து பின் திரும்பி பார்க்காமல் வந்து விடுமாறு சொன்னார் அவரு செய்த பின் அந்த அக்கா இயல்பு நிலைக்கு திரும்பினார் இன்னும் எனக்கு ஆச்சரியம் அவர் பேசிய நுனி நாக்கு ஆங்கிலம் மற்றும் மாறிய குரல் எவ்வளவோ அறிவியல் மாற்றம் வந்த பின்னும் நம் அறிவுக்கு எட்டாத சில உண்டு என்பது உண்மை