அமானுஷ்யம்: June 2011

Monday, June 27, 2011

அசாத்திய நிகழ்வுகள் அதிசய மனிதர்கள்

சில விஷயங்கள் சில மனிதர்கள் வரலாற்றை பொறுத்தவரை அதிசயமாகவும் அற்புதமாகவும் நமது சிந்தனைக்குஅர்பாற்பட்டதாக இருந்தவர்களை இருப்பவர்களை பற்றி சற்று காண்போம்

பச்சை நிற குழந்தைகள்

ஆம் ஸ்பெயினின் பான்ஜோஸ் நகரத்தினருகே 1887 ஆம் ஆண்டு அங்கே இருந்தவர்கள் ஒரு குகையின் வாயிலில் இரண்டு சிறார்கள் பெற்றோரின்றி தனியே அழுது கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால் அந்த சிறார்களின் மொழி அவர்களுக்கு புரியவில்லை நிச்சயமாக அவர்கள் ஸ்பானிஷ் மொழி பேசவில்லை எனபது அவர்கள் அறிந்து கொண்டனர் மேலும் அந்த சிறார்களின் தோல் நிறமானது பச்சை வண்ணமாக இருந்தது அவர்களுக்கு மேலும் ஆச்சர்யத்தை கொடுத்தது

பிறகு இரண்டு சிறார்களும் கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சிறிது நாட்களில் ஒரு சிறுவன் உணவு எதையும் உன்ன மறுத்த நிலையில் மரணமடைந்தான் .மற்றொரு சிறுமி வெகு காலம் கழித்து சாப்னிஷ் மொழியினை அறிந்த பிறகு தனது பூர்விகத்தை பற்றி கூறியது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது அந்த பச்சை சிறுமி தங்கள் இருந்த இடத்தில் சூரியன் கிடையாது என்றும் அங்கே நிரந்தமான மெல்லிய ஒளி இருக்கும் என்றும் ஒரு பெரு வெடிப்பு ஒன்றை கேட்டதாகவும் ஏதோ விவரிக்க முடியாத ஒன்று தன்னையும் தனது சகோதரனையும் இந்த குகைக்குள் தள்ளியதாக தெரிவித்தாள். இன்னும் புரியாத புதிரான விஷயங்களில் இதும் ஒன்று

இரண்டு சிறுவர்களையும் குறிக்கும் நினைவு சின்னம்

நெருப்பு மனிதன்

இத்தாலியை சேர்ந்த பெனடேட்டோ அதிசய மற்றும் ஆபத்து நிறைந்த அமானுஷ்ய சக்திகள் மூலம் பிரபல்யமாக ஆரம்பித்தார் . பென் தனது பார்வையின் மூலமே நெருப்பினை ஏற்படுத்தும் சக்தியை கொண்டிருந்தார். பென் பார்வையின் மூலமே நெருப்பினை ஏற்படுத்துவதற்கு மேலாக தனது வருகை நிகழும் இடாங்களில் நெருப்பினை உண்டாகும் அசாத்திய சக்தியை கொண்டிருந்தார். 1982 ஆம் ஆண்டு முதன்முதலாக பெனின் இந்த அதிசய நெருப்பு தன்மை ஒரு பல் மருத்துமனையில் வெளிப்பட்டது, வரவேற்ப்பரையில் அமர்ந்து காமிக் புத்தகத்தினை பென் படித்து கொண்டிருந்தபோது அந்த புத்தகம் எந்த வெளி தூண்டுதல் காரணம் இன்றி பற்றி எரிந்தது .பிறகு ஒருநாள் காலை தனது படுகையில் பற்றிய நெருப்புடன் உடல் மற்றும் உடை எறிந்த நிலையில் மீட்கப்பட்டான் பென் .மற்று மொரு முறை பெனின் உறவினர் கையில் இருந்த பிளாஸ்டிக் பொருளை , பென் பார்த்த போது எரிந்து பொசுங்கியது.பென் செல்லுமிடங்கள் பார்க்குமிடங்களில் தோறும் காகிதங்கள் மரபொருள்கள் புகைந்து எரிய தொடங்கியது. மேலும் அவ்வாறான சமயங்களில் பென்னின் கைகள் ஒளிர்ந்ததாக கூறுகின்றனர் சாட்ச்சியாளர்கள். பென்னும் அசாத்திய மனிதர்களில் பென்னும் ஒருவர்.

Tuesday, June 21, 2011

ஷம்பலா மர்மங்கள்


விக்டோரியா லேபெஜ் ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஷம்பலாவை பற்றி ஆய்வு செய்தற் தனது ஆய்வு புத்தகத்தில் கூறுகிறார். துணிவற்ற நவீன சமுகத்திற்கு இந்த மண்டலத்தினுடைய ஆணை தேவை எனவும் மண்டலா(பிரபஞ்சத்தின் ஒரு வரைபட அமைப்பு ) ஒழுங்கற்ற சுருள் போன்ற பிரபஞ்சத்தின் மையம் என கூறும் அவர் மேலும் ,இந்த மையத்தினை தேடி தொடர்வது மூலம் ஷம்பலாவினை அடையலாம். மேலும் ஷம்பலா உலகத்தின் அச்சு என கூறும் இந்த ஆய்வாளர் .இங்கே நாம் அறிய முடியாத அளவில் பல ரகசியங்கள் நிறைந்து இருக்கலாம் என கூறுகிறார். அருங்காட்சியகம் நூலகம் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு பிந்தைய தொழில் நுட்பம், மேலும் சீனர்களின் அறிவிதிறன்படி பிரபஞ்ச கோள்களுக்கு பயணம் செய்ய புதிய வாகனங்கள் ,மற்றும் பிற கிரஹங்களில் வசிப்பவர்களை கண்டறிய உதவும் புதிய வசதிமிக்க தொழில் நுட்பங்கள் இருக்குமென்று கூறுகிறார் . இவைகள் வெறும் ஒரு மதம் சார்ந்த கற்பனை என நாம் புறந்தள்ளி விடலாம் .ஆனால் புதிய நிலம் மற்றும் நாடுகளை கண்டறியும் ஒருவர் பற்றி தன் அனுபவங்களை முன் வைக்கிறார் .


ரஷியாவை சேர்ந்த நிக்கோலஸ் ரோறிச் இவர் பன்முகம் கொண்ட ஒரு மனிதர் நடிகர் கவிஞர் மேலும் தியோசொபிகல் சமுகத்தின் முக்கிய அங்கத்தினரும் கூட
1923 முதல் 1928 வரை இவர்கள் 15500 மைல்கள் 35 நாடுகளின் உயர்ந்த மலை பகுதிகளை கடந்தார்கள் கோபி பாலைவனம் முதல் அட்லாய் மலை வரை 1924 ஆன் ஆண்டு இந்திய மலை பயணங்களை ரோறிச் தன் குழுவினருடன் மேற்கொண்டார்.ரோறிச் தனது பயணத்தின் போது ஷம்பலாவை பற்றி அறிய நேர்ந்தது.

தனது பயணத்தின் போது ரோறிச் ஷம்பலாவை பற்றிய தனது எண்ணங்களை குறித்து வைத்து கொண்டார் பின்னலில் மிக பிரசித்தி பெற்ற நூலாக விளங்கியது அவருடைய குறிப்புகள் அதன் பெயர் altai-himalaya:a travelors guide

ரோறிச் இந்த புத்தகத்தில் ஒரு வினோத சம்பவத்தை விவரிக்கிறார். ரோறிச் தனது பயணத்தை அல்டாய் பயணத்தை முடித்து கொண்டு திரும்பிய பின் ஒரு வெள்ளை தூண் ஒன்றினை நிறுவி அத்தனை ஷ்மபலாவிற்கு அர்ப்பணம் செய்கிறார்.ஆகஸ்ட் மாதம் வெள்ளை தூண் ஷம்பலாவிற்கு அற்பணிக்கபடும் புனித சடங்குகளை செய்ய குறிப்பிட தக்க எண்ணிகையிலான லாமா துறவிகள் கலந்து கொள்கின்றனர் ஒரு மங்கோலிய குழுவின் தலைவர் வர இருக்கும் நாளில் இது குறித்து நல்ல செய்தி அல்லது சூசகமான தகவல் கிடைக்கும் என கூறுகிறார். அவர் கூறிய ஒரு அல்லது இரண்டு நாட்களுக்குள் ஒரு பெரும் கருப்பு பறவை ஸ்தூபிக்கு மேலாக பறந்து அம்பினை போல சூரியனை நோக்கி பாய்ந்து தங்கமென மின்னி எல்லோர் பார்வையும் அதன் மீது இருக்கும் போது சட்டேனே பார்வையில் இருந்து தப்பிய பறவையினை தொலைநோக்கி மூலம் கண்டபோது அட்லாயின் திசையிலுருந்து தென்மேற்கு பக்கமாக பறந்து ஹம்போல்ட் மலையின் பின்புறமாக சென்று மறைந்தது அதாவது ஷம்பலா திசையில் ,இது குறித்த ரோரிசிடம் லாமா ஒருவர் ஷம்பலாவின் கடவுளின் ஆசிர்வாதம் என கூறினார். மேலும் ஒரு ஆச்சர்யமான விஷயம் நமது மஹா விஷ்ணுவின் அவதாரமான கல்க்கி தீமைகளை அழித்து பின் ஷாம்பலில் அரசாள்வர் என கூறப்படுகிறது ஷம்பலா இன்னும் ஏரளாமான ஆச்சர்யங்களை கொண்டு உள்ளது .ஷம்பலாவின் மனிதர்கள் எவ்வாறு இருப்பார்கள் என திபெத்தில் பதினான்கு வருடங்கள் ஆய்வு பணி புரிந்த டேவிட் ஒ நில் எனும் பெண் கூறுகிறார் இமயமலை சாரலில் தான் கண்ட அந்த மனிதன் அமைதி தவழும் முகத்துடனும் வானுக்குள் அப்பாலுள்ள பொருள்களை காண்பனை போல கூறிய விழிகளுடன் காணப்பட்டதாகவும் அவனுடைய நடை பாய்ச்சல் போல அதே சமயம் பூமியில் கால் வைக்காமல் பறந்து செல்லும் ஒருவனை போல பெண்டுலம் அசைவதை போல சீரான இடைவெளியில் நடந்து சென்றதாக கூறுகிறார்.பல ஆச்சர்யங்களை கொண்ட ஷம்பலவை இன்னும் தேடி கொண்டே இருக்கின்றனர் .

Saturday, June 18, 2011

எங்கே இருக்கிறது ஷம்பலா

ஷம்பலா பனி படர்ந்த திபெத்திய மலைகளுக்கு அப்பால் எவரும்நெருங்க முடியாத இடத்தில் இருக்கும் அழகிய சொர்க்கமே ஷம்பலா. தூய உள்ளம் கொண்டவர்கள் வாழும் ஷம்பலாவில் மகிழ்ச்சி மட்டுமே உண்டு .அங்கே இருப்பவர்கள் என்றென்றும் இளைமையுடன் நோய் என்ற ஒன்றை அறியாதவர்களாக இருப்பார்கள். மேலும் அன்பும் ஞானமும் மட்டுமே பின்பற்றப்படும். அநீதி அங்கே அறியப்படாத ஒன்று மிக அழகான முறையில் மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்ளும் அவர்கள் அசாத்திய சித்திகளை கொண்டவர்களாக வெளி உலகத்தை விட பன்மடங்கு சிறந்த மனிதர்களாக ஞானமுடையவர்களாக இருப்பார்கள் .ஷம்பலா என்பதன் பொருள் மறைவான எனபது , பலரும் ஆன்மீகவாதிகள், கண்டுபிடிப்பாளர்கள் ,என ஷம்பலாவை கண்டுபிடிக்க முயன்ற போதும் அவர்களால் சிறு புள்ளியை கூட கண்டுபிடிக்க இயலவில்லை, எனினும் அவர்கள் கூற்றுப்படி ஷம்பலா இன்னும் இருக்கிறது. மானுடம் காணவியலா உலகின் ஏதோ ஒரு விளிம்பு பகுதியில், இந்த உலகத்திற்கும் மறு உலகத்திற்குமான ஸ்தூலஇணைப்பாக உள்ளது .

திபெத்திய புத்த பாரம்பரியத்தில் புராண நகரமான ஷம்பலா, ஆசியாவில் உள்ளார்ந்த பகுதியில் மறைந்துள்ளதாக நம்பப்படுகிறது .ஷம்பலா பற்றி புராதன நூல்களான காலசக்ர தந்த்ரம், மற்றும் ஜாங் ஜுங் கலாச்சாரத்திலும் திபெத்தின் இந்த நகரம் பற்றிய குறிப்புகள் உள்ளன .திபெத்தியர்களின் போண் கல்வெட்டுகள் ஷம்பலவை பற்றி மேலும் அதிக விஷயங்கள் கூறுகின்றன.ஷம்பலவின் வரலாறு எதுவானபோதும் இந்த நகரம் புத்த பிக்குகளின் தூய பகுதி, இந்த அற்புதமான நகரம் . இதனை பற்றி அறிந்தவர்கள் பயணிகள் என அனைவரையும் இந்த ஷம்பலா ஈர்த்து கொண்டு இருக்கிறது .ஷம்பலா என்பதன் சம்ஸ்கிருத அர்த்தம் சாந்தத்தின் உறைவிடம் அல்லது அமைதியான இடம் என்பதாகும், ஷம்பலாவின் உண்மையான இருப்பிடம் இதுவரை கண்டறியப்படவில்லை, மேலும் ஷம்பலாவினை எட்டு பெரும் மதங்கள் இருப்பதாக கூறுகின்றன . இந்த பிரபஞ்சத்தின் ஆத்மீகத்தின் மைய இடமாக இருப்பது இந்த ஷம்பலா என கூறப்படுகிறது .

மேலும் இதனை பற்றி கூறும்போது இங்கு வசிப்பவர்கள் தங்களுக்குள் சிறுகுழு ஒன்றை ஏற்படுத்தி கொண்டு. மனிதர்களுக்கு எல்லா காலங்களிலும் உதவி புரிகிறார்கள். பலநூறு மைல் தூரத்திற்கு வலை பின்னல் அமைப்பு கொண்ட துளைத்த பாதைகள் மூலம் ஷம்பலா புவிபகுதிக்கு மேலும் கீழும் இணைந்து உள்ளது .ஆண்ட்ரீவ் தாமஸ் தனது ஷம்பலா நூலில் அவர்களின் ரதங்கள் ஒளிமையமாகவும் தனித்த வடிவமைப்புடன் காணப்படுவதாக கூறுகிறார். அதுமட்டுமின்றி அவர்களின் செயற்கை ஒளி ஷம்பலாவில் காய் கறிகள் மாற்றிய உணவு பண்டங்களை உற்பத்தி செய்ய போதுமான அளவில் உள்ளதாகவும், இந்த உணவு பொருள்களின் மூலமே அவர்கள் நீண்ட நாள் நோயற்ற வாழ்வினை பெறுவதாக கூறுகிறார்.

மேலும் பல ஆய்வார்கள் ஷம்பலாவை பற்றி என்ன கூறுகிறார்கள் என பிறகு காண்போம்

Monday, June 13, 2011

கல்ப விக்ரஹமும் மர்மங்களும் -1

விக்ரகத்துடன் கூடிய கையெழுத்து பிரதியினை, அதில் இருந்த வாசகத்தை அதன் அர்த்தத்தை அறியCIAவிற்கு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்த பணியில் இந்தியாவை மற்றும் நேபாளத்தை சேர்ந்த ஊழியர்களும் இணைந்து பணியாற்றினார். வரலாற்றுக்கு அப்பாற்பட்ட அந்த மொழி சமஸ்க்ரிதம் தொடர்பு உடையது வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியர்களின் மொழியாக இருக்கலாம் என கணித்த வரலாற்று அறிஞர்களும் சரித்திர அறிஞர்களும் முடிவு செய்தபின் இறுதியாக அந்த கையெழுத்து பிரதியில் உள்ள வாசகத்தினை அறிந்து கொண்டனர், அது அந்த விக்ரஹத்தின் பெயரை சுட்டுவதாக இருந்தது.

கல்ப மகா ஆயுஷ்யம் ரசாயன விக்ரஹா

CIAதனது கோப்பில் கல்ப விக்ராஹமாக சுருக்கி குறிப்பிட்டது,

இனி அந்த கல்ப விக்ரஹத்தின் அமைப்பு பற்றி சற்று பார்ப்போம். பித்தளை போன்ற ஒரு வித உலோகத்தில் செய்யப்பட்ட இந்த சிலையின் எடை வெறும் 47.10 கிராம் மட்டுமே, சிவனை போல தோற்றமுடைய ஒற்றை காலை மடக்கி உள்ள தோற்றத்தில் காணப்படும் அந்த சிலையின் தலை பகுதியில் பாம்பினை கொண்டதாகவும், கழுத்தினால் ருத்ராக்ஷத்தினை போன்ற மாலை அணிந்தவராகவும், தனது வலக்கரத்தில் வட்ட வடிவ ஒன்று அநேகமாக சுதர்ஷன சக்ரம் போன்ற ஆயுதம் தாங்கியும் உள்ளார். மற்றும் ஒரு கையில் சங்கும் கனமான வட்டு போன்ற ஒன்றை கொண்ட நிலையில் அந்த சிலை உள்ளது .5.3 சென்டிமீட்டர் உயரமும் ,4.7 சென்டிமீட்டர் உயரமும் அதன் அடிப்பகுதி 2.5 சென்டிமீட்டர் நீளமும், 1.7 சென்டிமீட்டர் அகலமும் மட்டுமே உடைய கொண்ட இவ்வளவு சிறிய சிலை மிக பாதுகாப்பாக இந்த பேழையினுள் வைக்க பட்டு இருக்கிறது எனில், அது உண்மையில் மகத்துவம் மிகுந்ததாக இருக்க வேண்டும். அதன் மகத்துவம் என்ன CIA ஆர்வம் கொண்டது

இது குறித்த அனைத்து ஆவணங்களையும் தன்வசம் எடுத்து கொண்டது .CIA அங்கே கல்ப விகரகம் குறித்த அனைத்து ஆவங்களும் ஸ்டோர் ரூமில் இருந்ததற்கான மற்றுமாய்வு குறித்த அனைத்து ஆவணங்களும் மறைக்கப்பட்டது.

மற்றுமொரு ஓய்வு பெற்ற CIA அதிகாரியின் ரகசிய வாக்குமூலத்தின் படிCIAவின் ரகசிய சோதனைகள் நடைபெறும் இடமான langley virginiya வில் இது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டதாக கூறுகிறார் .அந்த ஆய்வு கூடங்களில் பல அசாத்திய ஆய்வுகள் நடை பெறுவதாகவும் கூறுகிறார் அந்த அதிகாரி.

மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் மிக முக்கியமானது நீர் ஆய்வு. ஒரு நாளைக்கு ஒரு டம்பளர் வீதம் மூன்று நாட்கள் கல்ப விக்ரகம் இருந்த நீரினை அருந்த வேண்டும். CIA வின் ஆய்வுகளில் இது மிக முக்கியமானதாக கருத்தப்பட்டது .அவ்வாறு அருந்துவது மூலம் ரசாயன கல்ப விக்ரகம் எந்த மாற்றத்தை ஏற்படுத்த போகிறேதென அதிகாரிகள் ஆர்வம் கொண்டிருந்தனர். அதே போல கல்ப விக்ரகம் இருந்த நீரினை ஆய்வு கூடங்களுக்கு அனுப்பி அத்தனை சோதனை செய்து மாற்றங்கள் குறித்து அறிந்து ஆர்வம் கொண்டிருந்தார் CIA இயக்குனரான ஜான் மேக்கோன்.


ஒன்பது பேர் அடங்கிய நீர் குழுவானது இந்த நீரை சந்தேகத்திற்கு இடமேர்ப்படாத வகையில் ,பொதுமக்களுக்கு வயது வித்தியாசமின்றி அருந்த சொல்லி சோதனையை மேற்கொண்டனர். பெரும்பாலும் கவனக்குறைவாக பலர் இந்த நீரை அருந்த வில்லை சிலர் சரியாக கடைபிடித்தனர்.

நீர் சோதனைகளை ஒருவழியாக சியா முடித்து கொண்டது இருந்தாலும் இது குறித்த முடிவுகள் பற்றி ஏதும் சரியாக அறியாத நிலையில், சில பல காலங்களுக்கு பிறகு டிசெம்பர் 2008 ஆம் ஆண்டு ஒரு தொலைபேசி உரையாடல் அனைத்தையும் வெளிக்கொணர்ந்தது. நீர் சோதனையில் ஈடுபட்ட ஒரு அதிகாரி இன்னொரு அதிகாரிக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார் அவர்கள் சிறு உரையாடல் இங்கே தரப்பட்டுள்ளது பெயர் மாற்றங்களுடன்,

மேக் என்னை நினைவு இருக்கிறதா, கல்ப விக்ரகம் என அழைக்கப்பட்ட ஹிந்து சிலை நீர் குறித்த ஆய்வில் சில விஷயங்களை சொல்ல அழைத்ததாக கூறுகிறார்.

கென் நீ தான் என்னை அழைத்ததா ,ஓய்வு பெற்று 32 வருடங்களுக்கு பிறகு அந்த சிலை பற்றி சொல்ல என்ன இருக்கிறது ?நான் அதை மறந்து போய்விட்டேன் அது தொலைந்து விட்டதா அது குறித்து என்ன இருக்கிறது பேச,

கென் மைக்ரோபயாலஜிஸ்ட் நிபுணத்துவம் வாய்ந்தவர் .இவர் CIA வில் 1946 இல் இணைந்த வயது 38 தற்பொழுது கென்னின் வயது 100, மேக் வயதோ 98 இப்பொழுது கென் நீர் சோதனையை பற்றி நினைவு கூறுகிறார். மேக் தான் ஆய்வில் நீரினை கொடுத்தவர்களை பற்றிய விவரங்களை தனது பழைய நாட்குறிப்பு மற்றும் இன்னும் சில வற்றின் மூலம் கூறுகிறார் . பிறகு நேரில் சந்தித்து கொள்ளும் இருவரும் இது குறித்த அனைத்து விவரங்களையும் குழு நண்பர்களையும் விவாதிக்கிறார்கள் பிறகு அனைத்தையும் சரி பார்க்கும் போது அவர்கள் கண்ட மிக முக்கிய விஷயம் இந்த கல்ப விக்ரக நீரினை அருந்தியவர்கள் மிக நீண்ட காலம் ஏறத்தாழ நூறு வயதுக்கு மேல் வாழ்ந்து உள்ளனர். அதாவது கல்ப ரசாயன விக்ரகம் மனிதர்களை மிக நீண்ட காலம் வாழவைக்கும் சக்தி கொண்டது எனபது மேலும் அந்த விக்ரகம் CIA பிடியில் இருந்து கடத்தப்பட்டு இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது ,அதன் புகைப்படங்கள் இங்கே,

Saturday, June 11, 2011

எரிக்கின் தவறும் மரணமும்

எரிக் தனது வாழ்வின் உச்சத்தில் இருந்தார் .அதிகாரமிகுந்த நண்பர்களின் நட்ப்புணர்வுடன் செல்வாக்கு மிகுந்தவராக , 1933 இல் ஹிட்லர் நாஜிக்களின் தலைவரானபோது நாஜி நண்பர்களோடு தனது வலிமை உயர்வதை அறிந்திருந்தார்.

இந்த நம்பிக்கை எரிக்கினை தவறு செய்ய தூண்டியது ,வினாச காலம் விபரீத புத்தி என்பதற்கு ஏற்ப எரிக் தவறான முன்னவரிப்புகள் கொடுத்தார்

தனது மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்வில்எரிக் தன்னால் ஒரு கட்டிடம் அதுவும் சிறப்பு மிகுந்த கட்டிடம் தீப்பற்றி கொள்வதாகவும் ,கொழுந்து விட்டு எரியும் தீ ஜுவாளைகளையும் எங்கும் புகை மண்டலமாகவும் ,அதே சமயம் அதன் சாம்பலில் இருந்து அந்த கட்டிடம், புதிய ஒளியுடனும் நம்பிக்கையுடனும் பீனிக்ஸ் பறவை போல எழுவதை காணுவதாகவும் எரிக் கூறுகிறார்.

இந்த கணிப்பு சரியாக 1933 மாதம் 27 தேதி நடேந்தேருகிறது ,ஜெர்மானிய பாராளுமன்ற கட்டிடமாகிய ரிச்ஸ்டாக் நெருப்புக்கு இரையாகிறது. நாஜிக்கள் இதற்க்கு காரணமாக கம்யுனிஸ்ட் மேல் குற்றம் சாட்டுகின்றனர் .இதனால் வெகுண்டெழுந்த மக்கள் ஹிட்லருக்கு வானளாவிய அதிகாரத்தை தரும் சட்டத்தை நிறைவேற்ற அனுமதி அளிக்க ஒப்புகொள்கின்றனர். ஆனால் உண்மையில் அந்த கட்டிடத்திற்கு தீ வைத்தது நாஜி படையினரே.

எரிக்கிர்க்கு இந்த உண்மை தெரியும், இவர்கள் என்பதற்கு மேலாகவும் பல உண்மைகளை எரிக் அறிந்து இருந்தார். இருப்பினும் அவற்றை வெளியிடவில்லை . தனது செயல்களுக்கு பலன் விரைவில் வரும் என்பதை எரிக் அறியவில்லை.

மார்ச் 24 தேதி ஒரு உணவகத்தில் இருந்து வெளிப்படும் எரிக், இரண்டு அடையாளம் தெரியாத மனிதர்களால் அழைத்து செல்ல படுகிறார். பிறகு அவரின் சடலம் மட்டுமே எறிந்த நிலையில் கண்டெடுக்க படுகின்றது .எரிக் மரணம் குறித்து பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமானது ,எரிக்கிர்க்கு பெரும்பாலானான ரகசியங்கள் அறிந்து இருந்தார். மேலும் எரிக்கின் கொலைக்கு பின் ஜெர்மனியில் இது போன்ற வானவியல் கோள்கள் முன்னரிவித்தளுக்கு தடை செய்யப்பட்டது.

அசாத்திய திறன்களை கொண்ட எரிக் கூட நடப்பின் காரணமாக தனது உயிரை இழந்ததும் அவரின் உயர்வும் தாழ்வும் வரலாற்றில் ஒரு பாடமாகவே இருக்கும்.

Friday, June 10, 2011

கல்ப விக்ரகமும் மர்மங்களும்

முதலிலேயே ஒரு விஷயத்தை இங்கே குறிப்பிட விரும்புகிறேன் ,இந்த தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவின் CIA நிறுவனத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற அலுவலர் வெளிபடுத்தியவை . இப்பொழுது விஷயத்திற்கு வருவோம் 47 கிராம் மட்டுமே எடை கொண்ட ஒரு வகையான பித்தளை போன்ற உலோகத்தினாலான மிக புராதனமான இந்து கடவுளின் அந்த சிலையை இழந்த அமெரிக்க CIAமிகுந்த வேதனயும் கவலையும் அடைந்தது.

அந்த சிலையை குறித்து சில வினாக்கள் அந்த சிலைக்கும் அமெர்க்கCIAநிறுவனத்திற்கும் என்ன தொடர்பு? ஹிந்துக்களின் கடவுள் சிலையை கொண்டுCIAசெய்த காரியம் என்ன? இவ்வளவு கவலை கொள்ளும் அளவு அந்த சிலையின் மர்மம் என்ன?

ஏறத்தாழ அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 1959-1960 திபெத்தின் ஒரு துறவிCIAஅதிகாரிகளிடம் ஒரு பேழையை மற்றும் அதனுள் அடங்கிய மிக முக்கியமான பொருளுடன் தருவதுடன், அதனை மிக கவனமாக பாதுகாக்கும் படி லோ மோந்தங் இடத்தில் தருகிறார் .அத்துடன் அந்த துறவி அந்த பேழையின் முக்கியத்துவத்தை இதற்குரியCIAஅதிகாரியிடம் கூறியதை ,அவர் அப்படியே இந்த பேழை மற்றும் அதனுள் இருக்கும் விக்ராகத்தினை பற்றி துறவி கூறியதை குறிப்பினை எடுத்துகொல்கிறார் . சைனா திபெத் போரில் துறவியும் மற்ற பாதுகாவலர்களும் கொல்லபடுகின்றனர் .இதன் பின்னர் அந்த பேழை இந்தியவின் வழியாக ரகசியாமாக தற்பொழுது அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள கேம்ப் ஹால் கொண்டு செல்லபடுகிறது .

சில வாரங்களுக்கு பின் அந்த சிலை கொண்ட பேழை வாஷிங்கடனில் உள்ளCIAஸ்டோர் ரூமில் "ST Circus Mustang-0183". என்ற லேபிளுடன் வைக்க படுகிறது.


சிலகாலம் கழித்து CIA வின் பார்வை அந்த பேழை மீது திரும்புகிறது ,அதன் உள்ளிருக்கும் பொருளின் மர்மம் குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட சியா, அந்த பேழைக்குள் வினோத கையெழுத்து பிரதி ஒன்றை கண்டேடுக்கின்றனர் . மேலும் மிக வினோதமான முறையில் வடிவமைக்கப்பட்ட அதனை மேலும் சோதனை உட்படுத்த முடிவு செய்கின்றனர் .அந்த பேழை செய்யப்பட்ட மரம் குறித்து அறிய ரேடியோ கார்பன் சோதனை செய்யபடுகிறது. அமெரிக்காவின் the University of California Radiation லபோரடோரி செய்யப்பட்ட ஆய்வு முடிவுகளை கண்ட CIA அதிகாரிகள் அதிர்ந்து போகின்றனர், காரணம் அந்த பேழை இந்த யுகத்தினுடயது இல்லை ஆம் ஹிந்துக்களின் காலகணக்கு படி துவாபர யுகத்தை சேர்ந்தது. ரேடியோ கார்பனின் ஆய்வுப்படி ஒன்பது அங்குல தடிமன் கொண்ட அந்த பேழையின் வயது ஏறத்தாழ 28450 வருடங்கள் ஏறத்தாழ குருஷேத்திர போருக்கு முந்தியது.

கல்ப விக்ரகம் கண்டெடுக்கப்பட்ட பேழை பண்டைய காலமுறை முடி கொண்ட அமைப்புடன் கம்பி கொண்டு பூட்டும் முறையில் இருந்தது, மேலும் பேழையின் நான்கு புறமும் எட்டு அங்குலம் தடிமனும் அதன் மூடியானது ஆறு அங்குலதடிமனும் கொண்டதாக இருந்தது, இதன் பலகைகள் தேக்கினால் செய்யபட்டும் பித்தளை போன்ற ஒருவித கலவை உலோக தகடு ஒரு அங்குல தடிமனுடன் பொருத்தப்பட்டு பலகையும் தகடும் கடையாணி மூலம் இறுக்கப்பட்டு பலகைகள் காலகாலத்திற்கும் காக்கும்படி பொருத்தபட்டிருந்தது. பேழையின் வெளிப்புற தோற்றமே அது பலகாலம் புதையுண்டு இருந்ததை கூறுவதாக இருந்தது.

மேலும் தொடருவோம்

Wednesday, June 8, 2011

எரிக்கும் நாஜி படையும்

1930 எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய ஆற்றல் மூலம் கிடைத்த புகழையும் பொருளையும் மூலதனமாக கொண்டு இரண்டு இதழ்களை தொடங்குகிறார். ஹன்னுசின் மேகசின் எனும் மாதந்திர இதழும், மற்றுமொரு இருவாரங்களுக்கு ஒரு முறை வெளிவரும் இதழ், ஒன்றையும் துவங்கி நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரம் குறித்த தனது முன்னறிவிப்பு மற்றும் மறைபொருள் குறித்த செய்திகளை இந்த இதழ்களின் மூலம் எரிக் வெளிப்படுத்தினார். அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முன்னறிவிப்பினை வெளியிட்டார். ஜெர்மனியின் பெரும் கூட்டு பங்கு பணபரிவர்த்தனை செய்யும் வங்கிகள் சரிவினை சந்திக்கும் என்ற அவரது கணிப்பு அடுத்த மூன்று வாரங்களில் நிஜமானது. ஜெர்மனியின் மிக முக்கிய இரண்டு வங்கிகள் இழுத்து மூடப்பட்டது .

1932 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எரிக் தனது பத்திரிக்கையில் மேலும் ஒரு செய்தியை வெளியிடுகிறார் "ஹம்பர்க் நகரம் அருகே ரத்த ஆறு ஓடுவதை" தன்னால் காண முடிவாதாக வெளியிட்டார் .சில நாட்களில் ஹாம்பர்க் நகரின் அருகே உள்ள அட்லான நகரில் கம்யுனிஸ்ட் மற்றும் நாஜி படைக்கும் இடையே நடைபெற்ற ஐந்து மணிநேர கோரமான போரில், அட்லான நகரில் ரத்த ஆறு ஓடியது இந்த போர் அட்லானவின் கருப்பு ஞாயிறு என அழைக்கபடுகிறது .எரிக் இதனை தன் தீர்க்கதரிசனம் மூலம் அறிந்து கொண்டார ,அல்லது உயர் அதிகாரிகளின் மூலம் இந்த ரகசியங்களை அறிந்து வெளியிடுகிறாரா, என சந்தேகங்கள் இருந்த போதும் பெரும் பணம்படைத்தவர்கள் எரிக்கின் ஆலோசனையை நாடத்தொடங்கினார். தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள .

இந்த நிலையில் நாஜிக்களின் படையுடன் படையின் முக்கியஸ்தர்களுடன் எரிக் நட்ப்பினை வளர்த்து கொண்டார். மேலும் இவ்வாறு நாஜிக்களுடன் தனது நடப்பை வலுபடுத்தி கொண்டபோதும் . சாமானிய மக்களுடனும் எரிக் நெருங்கி பழகிவந்தார்
சில வரலாற்று அறிஞர்களின் கூற்று படி நாஜிக்களுக்கு ஸ்வஸ்திக் சின்னத்தினை தங்கள் சின்னமாக வைக்கும் படி கூறியது எரிக் தான், இந்துக்களின் இந்த சின்னம் நாஜிக்களுக்கு பெரும் வெற்றியை தேடி தரும் என்றும் அவர் கூறியதாகவும் கூறுகின்றனர் .மேலும் தனது இதழ்களில் எரிக் தேர்தலில் கோள்களின் நிலைப்படி ஹிட்லரே மகத்தான வெற்றியை அடைவார் எனவும் ,அவருக்கே காலநிலை சாதகமாக இருப்பதாகவும் எழுதி தனது பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார் .

மேலும் ஜேர்மனிய பத்திரிகையலர்களின் கூற்று ஹிட்லருக்கு மேடை பேச்சிற்கு எரிக்கே மூல காரணம், ஹிட்லருக்கு எரிக் மேடை பேச்சின் நெளிவு சுழிவுகளை பயிற்சி அளித்ததாகவும் கூறுகின்றனர். மேடை நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்ற எரிக் ஹிட்லருக்கு வார்த்தையை உச்சர்க்கும் விதம் உடல்மொழி போன்றவற்றை பயிற்றுவித்ததாக கூறுகின்றனர். இந்த அசாத்திய பேச்சுத்திறன் மற்றும் தவறான நம்பிக்கையின் காரணமாக ஹிட்லர் தன் தேசத்தையும் இந்த உலகத்தையும் போரை நோக்கி கொண்டு சென்றார். எரிக்கும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தார்.

அடுத்த பகுதியில் காண்போம் .,

Monday, June 6, 2011

தீர்க்க தரிசி எரிக்


எரிக் ஜான் ஹனுசென் 1889 இல் யூத தந்தைக்கு பிறந்த இவரின் உண்மையான பெயர் ஹெர்மான் ஸ்டெய்ன்நேடர், இவருடைய தந்தை ஒரு நாடக நடிகரும் கூடுதலாக யூத ஆலயத்தை கவனிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தார் .பள்ளி கல்வியை கைவிட்ட எரிக் சர்க்கஸில் இணைத்து கத்தி எறிவது, நெருப்பினை உண்பது போன்ற சர்க்கஸ் சாகசங்களை நன்கு கற்று தேறினார்.
முதலாம் உலக போரில் படை வீரனாக இருந்த எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய சக்திகளை செய்து காட்ட தொடங்கினார். ஒரு கட்டத்தில் எரிக்கின் குழாமிற்கு நீர் தட்டுபாடு ஏற்பட்ட பொது அனைவரும் நம்பிக்கை இழந்த தருணத்தில் எந்த உபகரணங்களும் மந்திரகோலும் இன்றி தனது நண்பர்களுக்கு நீரினை வரவழைத்தார் எரிக் ,எரிக்கின் அசாத்திய ஆற்றலும், அனைவரையும் கவரும் தோற்றமும், அவரை சாதாரண சிப்பாய் என்ற நிலையில் இருந்து படை வீரர்கள் கூட்டத்தின் முன் நிகழ்ச்சிகளை செய்து காட்டும் அளவு உயரத்தில் ஏற்றி விட்டது.

போர் முடிந்த பின்னர் எரிக் தனது தூரத்ருஷ்டி(clairvoyance ) ,அடுத்தவரின் மனதில் உள்ளதை அப்படியே படித்து காட்டுவது (mind reader ),போன்ற சக்திகளை மேலும் வளர்த்து கொண்டு ஜெர்மன் அதனை சுற்றி உள்ள தேசத்திலும் தனது அபூர்வ சக்தியை பற்றிய நிகழ்வுகளை நடத்தி கொண்டு வந்த போது ,ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அவரை மேலும் சிக்கலிலும் ஆழ்த்தியது .ஆனாலும் மேலும் பிரபல்யமாகவும் செய்தது.

ஆம்., ஒரு கொலையை பற்றி தனது நிகழ்ச்சியில் அத்தனை செய்திகளையும் விளக்கினார் .ஆனால் அந்த செய்தி எரிக் கூறியதன் பின் தாமதாகவே பத்திரிகைகளில் வெளியானது, இதன் மூலம் எரிக்கின் மேல் சந்தேக பார்வை விழ தொடங்கியது ,இவருக்கும் கொலை கூட்டத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா பத்திரிகை அல்லது காவல்துறை மூலம் இந்த செய்தியை அறிந்து கொண்டாரா என்று ஆனாலும் பலர் இந்த முன்னறிவிப்பை கண்டு ஆச்சர்யம் கொண்டானர்.

எரிக்கிர்க்கு தொல்லைகள் இல்லாமலும் இல்லை. ஒரு முறை எரிக் கைது செய்யபட்டார் காரணம் எரிக் பணத்தை பெற்று கொண்டு தவறான தகவல்கள், அதாவது இவரது கணிப்ப்புகள் தவறானது என்ற வழக்கு தொடரப்பட்டு கைதும் செய்யபட்டார். ஆனால் தனக்கு எதிரான இந்த வழக்கின் மூலம் எரிக் எவரும் தொட இயலாத நட்ச்சத்திர அந்தஸ்த்தை பெற்றுவிட்டார்.

செக்கொலோஸ்கியாவில் நடை பெற்ற வழக்கில், எரிக்கின் அசாத்திய ஆற்றல்கள் குறித்த முன்னறிவிப்புகள் குறித்த சந்தேகம் கிளம்பியது, ஆனால் எரிக் வழக்குரைஞரின் சட்டை பையில் இருக்கும் பொருள்களையும் நீதியரசரின் வழக்கு பேழையில் இருந்த பொருள்களையும் மிக சரியாக கூறியபோது நீதியரசர் இவை எரிக்கின் நிகழ்ச்சியில் நடத்தப்படும் கண்கட்டு வித்தை என்று புறந்தள்ளினார் .எரிக் தனது ஆற்றலின் மகத்துவத்தை புரியவைக்க ஒரு திருட்டினை திருடன் நிற்க்குமிடம் போன்றவற்றை துல்லியமாக கூறினார். கமெர்சியல் வங்கியில் கொள்ளையடித்த திருடன் லேய்ட்மேரிட்ஸ் ரயில்வே நிலையத்தில் 2 எண் ரயில்வே பிளாட்பார்மில் நிற்பதகாவும், அவனது கைப்பெட்டியில் இருக்கும் பணத்தையும் பற்றி சரியாக கூறினார். ரயில்வே நிலையம் சென்ற காவலர்கள் அந்த கொள்ளையனை கைது செய்து அழைத்து வந்தனர், எரிக் சொல்லியது போலவே .விடுதலை செய்யப்பட்ட எரிக்கின் புகழ் இந்த நிகழ்வின் பின் இன்னும் அதிகமானது.

மற்றுமொரு முறை பெர்லினில் செயின்ட் ஸ்காலா என்ற இடத்தில் மேடை நிகழ்வை நடத்தியபோது எரிக் கூறிய இன்னொரு முன்னறிவிப்பும் அவருக்கு பெரும் புகழை ஈட்டி தந்து. பாரவையளர்கள் கூட்டத்தில் இருந்த வங்கியாலரிடம் எரிக் அவருடைய வங்கியின் பாதுகாப்பு அறையில் தவறான மின் இணைப்பு காரணமாக தீ பரவபோவதாகவும் 360000 மார்க்ஸ் பணம் சேதமேர்ப்படலாம், என்றும் மிக விரைவாக தீயணைப்பு துறையினை அழைக்குமாறு எரிக் அவரிடம் கூறுகிறார். அந்த வங்கியாளரும் அவ்வாறே செய்ய அங்கு சென்ற தீயணைப்பு குழுவினர் எரிக் கூறியதை போல தவறான மின் இணைப்பு இருப்பதை கண்டு ஆச்சர்யமுற்றனர்.

எரிக் பற்றி மேலும் தொடர்வோம்