அமானுஷ்யம்: தீர்க்க தரிசி எரிக்

Monday, June 6, 2011

தீர்க்க தரிசி எரிக்


எரிக் ஜான் ஹனுசென் 1889 இல் யூத தந்தைக்கு பிறந்த இவரின் உண்மையான பெயர் ஹெர்மான் ஸ்டெய்ன்நேடர், இவருடைய தந்தை ஒரு நாடக நடிகரும் கூடுதலாக யூத ஆலயத்தை கவனிக்கும் பொறுப்பையும் மேற்கொண்டிருந்தார் .பள்ளி கல்வியை கைவிட்ட எரிக் சர்க்கஸில் இணைத்து கத்தி எறிவது, நெருப்பினை உண்பது போன்ற சர்க்கஸ் சாகசங்களை நன்கு கற்று தேறினார்.
முதலாம் உலக போரில் படை வீரனாக இருந்த எரிக் தனது அசாத்திய அமானுஷ்ய சக்திகளை செய்து காட்ட தொடங்கினார். ஒரு கட்டத்தில் எரிக்கின் குழாமிற்கு நீர் தட்டுபாடு ஏற்பட்ட பொது அனைவரும் நம்பிக்கை இழந்த தருணத்தில் எந்த உபகரணங்களும் மந்திரகோலும் இன்றி தனது நண்பர்களுக்கு நீரினை வரவழைத்தார் எரிக் ,எரிக்கின் அசாத்திய ஆற்றலும், அனைவரையும் கவரும் தோற்றமும், அவரை சாதாரண சிப்பாய் என்ற நிலையில் இருந்து படை வீரர்கள் கூட்டத்தின் முன் நிகழ்ச்சிகளை செய்து காட்டும் அளவு உயரத்தில் ஏற்றி விட்டது.

போர் முடிந்த பின்னர் எரிக் தனது தூரத்ருஷ்டி(clairvoyance ) ,அடுத்தவரின் மனதில் உள்ளதை அப்படியே படித்து காட்டுவது (mind reader ),போன்ற சக்திகளை மேலும் வளர்த்து கொண்டு ஜெர்மன் அதனை சுற்றி உள்ள தேசத்திலும் தனது அபூர்வ சக்தியை பற்றிய நிகழ்வுகளை நடத்தி கொண்டு வந்த போது ,ஒரு குறிப்பிட்ட நிகழ்வு அவரை மேலும் சிக்கலிலும் ஆழ்த்தியது .ஆனாலும் மேலும் பிரபல்யமாகவும் செய்தது.

ஆம்., ஒரு கொலையை பற்றி தனது நிகழ்ச்சியில் அத்தனை செய்திகளையும் விளக்கினார் .ஆனால் அந்த செய்தி எரிக் கூறியதன் பின் தாமதாகவே பத்திரிகைகளில் வெளியானது, இதன் மூலம் எரிக்கின் மேல் சந்தேக பார்வை விழ தொடங்கியது ,இவருக்கும் கொலை கூட்டத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா பத்திரிகை அல்லது காவல்துறை மூலம் இந்த செய்தியை அறிந்து கொண்டாரா என்று ஆனாலும் பலர் இந்த முன்னறிவிப்பை கண்டு ஆச்சர்யம் கொண்டானர்.

எரிக்கிர்க்கு தொல்லைகள் இல்லாமலும் இல்லை. ஒரு முறை எரிக் கைது செய்யபட்டார் காரணம் எரிக் பணத்தை பெற்று கொண்டு தவறான தகவல்கள், அதாவது இவரது கணிப்ப்புகள் தவறானது என்ற வழக்கு தொடரப்பட்டு கைதும் செய்யபட்டார். ஆனால் தனக்கு எதிரான இந்த வழக்கின் மூலம் எரிக் எவரும் தொட இயலாத நட்ச்சத்திர அந்தஸ்த்தை பெற்றுவிட்டார்.

செக்கொலோஸ்கியாவில் நடை பெற்ற வழக்கில், எரிக்கின் அசாத்திய ஆற்றல்கள் குறித்த முன்னறிவிப்புகள் குறித்த சந்தேகம் கிளம்பியது, ஆனால் எரிக் வழக்குரைஞரின் சட்டை பையில் இருக்கும் பொருள்களையும் நீதியரசரின் வழக்கு பேழையில் இருந்த பொருள்களையும் மிக சரியாக கூறியபோது நீதியரசர் இவை எரிக்கின் நிகழ்ச்சியில் நடத்தப்படும் கண்கட்டு வித்தை என்று புறந்தள்ளினார் .எரிக் தனது ஆற்றலின் மகத்துவத்தை புரியவைக்க ஒரு திருட்டினை திருடன் நிற்க்குமிடம் போன்றவற்றை துல்லியமாக கூறினார். கமெர்சியல் வங்கியில் கொள்ளையடித்த திருடன் லேய்ட்மேரிட்ஸ் ரயில்வே நிலையத்தில் 2 எண் ரயில்வே பிளாட்பார்மில் நிற்பதகாவும், அவனது கைப்பெட்டியில் இருக்கும் பணத்தையும் பற்றி சரியாக கூறினார். ரயில்வே நிலையம் சென்ற காவலர்கள் அந்த கொள்ளையனை கைது செய்து அழைத்து வந்தனர், எரிக் சொல்லியது போலவே .விடுதலை செய்யப்பட்ட எரிக்கின் புகழ் இந்த நிகழ்வின் பின் இன்னும் அதிகமானது.

மற்றுமொரு முறை பெர்லினில் செயின்ட் ஸ்காலா என்ற இடத்தில் மேடை நிகழ்வை நடத்தியபோது எரிக் கூறிய இன்னொரு முன்னறிவிப்பும் அவருக்கு பெரும் புகழை ஈட்டி தந்து. பாரவையளர்கள் கூட்டத்தில் இருந்த வங்கியாலரிடம் எரிக் அவருடைய வங்கியின் பாதுகாப்பு அறையில் தவறான மின் இணைப்பு காரணமாக தீ பரவபோவதாகவும் 360000 மார்க்ஸ் பணம் சேதமேர்ப்படலாம், என்றும் மிக விரைவாக தீயணைப்பு துறையினை அழைக்குமாறு எரிக் அவரிடம் கூறுகிறார். அந்த வங்கியாளரும் அவ்வாறே செய்ய அங்கு சென்ற தீயணைப்பு குழுவினர் எரிக் கூறியதை போல தவறான மின் இணைப்பு இருப்பதை கண்டு ஆச்சர்யமுற்றனர்.

எரிக் பற்றி மேலும் தொடர்வோம்


1 comment:

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அதிசயம்... ஆனால் உண்மை...

என்ற தலைப்பின் கீழ் ஓர் அழகான, ஆழமாக சிந்திக்க வைக்கும் பதிவு...

பகிர்விற்க்கு மிக்க நன்றி ஜி....

Post a Comment