அமானுஷ்யம்: January 2012

Saturday, January 28, 2012

மாயத்துறவி ரஸ்புடின் -3

அலேக்சியின் உயிரை காத்த ரஸ்புடினை சார் மன்னரும் அரசியும் தங்களுடன் இருக்குமாறு வேண்டிகொண்டனர், இதுவரை சாதாரண விவசாயி போல பணிவுடன் தோற்றம் கொண்டு உலாவந்த ரஸ்புடின், மாளிகைக்கு வந்த பின் உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டார், கூடவே தன பெண் சீடர்களையும் அதிகரித்து கொண்டு அவர்களுடன் வலம் வந்தார். 

பலர் முன்னிலையில் பெண் சீடர்களுடன் சிற்றின்ப விளையாட்டுக்களில் ஈடுபட்ட ரஸ்புடின் அவர்களை ஒருவரை தேர்ந்தெடுத்து தனியே அழைத்து சென்று கூறுவது "நான் உன்னை அசுத்தபடுத்துவதாக நீ நினைக்கலாம் ஆனால் உண்மை என்னவெனில் நான் உன்னை புனிதபடுத்துகிறேன் என்பதே" ரஸ்புடின் சீடர்கள் இதனை புனிதமாக கருதினர்(the holy of hoiness)

ரஸ்புடின் தன் சீடர்களுடன்இளவரசி ஒல்கா(olga )விஷயத்தில் ரஸ்புடின் அதிக இடம் எடுத்து கொள்வதாகவும் பின்னிரவு நேரங்களிலும் கூட ரஸ்புடினை அறையில் கண்டதாக ஒல்காவின் ஆசிரியை ரஷிய அரசி அலெக்சாண்ட்ரியாவிடம்   கூறியபோது அலெக்சாண்ட்ரிய ரஸ்புடினை பாதுகாக்கும் விதமாக பேசியதன் மூலம் அலெக்சாண்ட்ரிய மேல் இருந்த ரஸ்புடின் பிடியை அறிய முடிந்தது. 

1911 - ஆம் ஆண்டுகளில் ரஸ்புடின் மீதான குற்றாசாட்டுகள் பெருமளவில் வெளியே கசிய தொடங்கியது முதன் முதலில் ரஸ்புடினை சந்தித்த பிரபு நிக்கொலோவிச் மற்றும் அவர் மனைவி ரஸ்புடினை பற்றி இந்த காலகட்டத்தில் கூறியது "மீண்டும் ஒருபோதும் அந்த தீய சக்தியை சந்திக்க விரும்பவில்லை" என கூறினார் .

ரஷிய ஆர்த்தடக்ஸ் சர்ச்சே முதன் முதலில் ரஸ்புடின் மீதான அதிகாரபூர்வ குற்ற விசாரணையை துவங்கியது, அவர்களுக்கு கணக்கற்ற ஆதாரங்கள் கிடைத்தன பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம் போன்றவற்றை சேகரித்து அரசி அலெக்சாண்ட்ரியாவிடம்  சமர்பித்து ரஸ்புடின் குறித்தும் ரஸ்புடினை நம்ப வேண்டாம் எனவும் கேட்டு கொள்கின்றனர் அனால் அலெக்சாண்ட்ரியா இதனை எதையும் ஏற்க்க தயாராக இல்லை, அனைத்தையும் புறந்தள்ளினார், இந்த நிகழ்வுகள் மூலம் ரஸ்புடினுக்கும்   அரசிக்கும்  இடையே இருந்த உறவை தெளிவாக்கியது.
துறவி இலியோடர்
                                                                                                                                                 ரஸ்புடினின்  நண்பர் என குறிக்கப்படும் மற்றுமொரு துறவி இலியோடர்  (iliodar)  ரஸ்புடினின்   வரம்பு கடந்த செயல்களை அறிந்து அவரை இந்த பாதையை விட்டு விலகுமாறும் மேலும் ரஸ்புடின் ஒரு பெண் துறவியிடம் தவறாக நடந்து கொண்டதை அறிந்து வெகுண்டு அவரிடம் பெண்களை விட்டும் அரச குடும்பத்தை விட்டும் விலகி செல்லுமாறும்  சத்தியம் வாங்கியதாகவும் அதனை சரியாக ரஸ்புடின் நிறைவேற்ற வில்லை எனவும் கூறப்படுகிறது. 

ரஸ்புடின் குறித்த எந்த குற்றத்தையும் செவிமடுக்க ஜார்  அரசரும் அரசியும் தயாராக இல்லை காரணம் ரஸ்புடினை அவர்கள் துறவியாக நேசித்தனர். அரசி அலெக்சாண்ட்ரியா ரஸ்புடின் குறித்த குற்றசாட்டுகளுக்கு கூறிய பதில் "ரஸ்புடினை அவர்கள் வெறுக்க காரணம் நாங்கள் அவர் மீது அன்பு செலுத்துவதால்" என கூறினார்.

மேலும் தொடர்வோம்

Saturday, January 21, 2012

மாயதுறவி ரஸ்புடின்-2


ராணிஅலெக்சாண்ட்ரிய  


 மருத்துவர் பிலிப் என்பவருடன் ஜார் அரசி அலெக்சாண்ட்ரியா உடன்  நாடு மற்றும் கடவுள் போன்றவற்றை குறித்து விவாதிப்பது வழக்கம் அச்சமயம் மருத்துவர் பிலிப் கடவுள் குறித்து விவாதத்தின் பொது ரஸ்புடின் குறித்து கூறுகிறார்.
ரஷிய அரசர் மற்றும் அரசி ரஸ்புடினை 1905 -1906  இந்த வருடங்களில் சொற்ப அளவிலேயே சந்தித்து உள்ளனர், அந்த சந்திப்பின் போது ரஸ்புடின் தனது அமானுஷ்ய சக்திகளை உபயோகபடுத்தாமல் இயல்பான முறையில் அவர்களை எதிர்கொண்டுள்ளார்,

இளவரசர் அலெக்சி
ஜார் மன்னருக்கும் ஒரு முக்கியாமான பிரச்சினை இருந்தது 1904  இல் ரஷிய ஜப்பானிய போர் ஆரம்பித்தது அதே வேலை 1905  ரஷிய மன்னருக்கு ஆண் வாரியான அலெக்சி பிறந்தார், ரஷிய அரச குடும்பத்தின் வாரிசான அலெக்சி பிறப்பு மன்னரை மட்டுமின்றி மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது ஆனால் அலேக்சிக்கு தன பாட்டிவழி நோயான   ஹீமோபீலியாவை கொண்டிருந்தார்
ஹீமோபீலியா என்பது காயம் ஏற்பட்டால் ரத்தம் வெளிவந்து உறையாமல் தொடர்ந்து வெளியேறும் ஒரு வகை மரபு நோய், மிகவும் நோய் வாய்ப்பட்ட முறையில் இருந்த அலேக்சியை கவனித்து கொள்ளவும் பாதுகாக்கவும் தனி பாதுகாவலர் நியமிக்க பட்டார் இந்த செய்தி மக்களுக்கு தெரியாத வண்ணம் அரசரும் அரசியும் பார்த்து கொண்டனர் அதே சமயம் அலேக்சியின் நோயின் காரணமாக அவரால் இயல்பான வாழ்வை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

அரசியின் ஆலோசகரான பிலிப் ஏற்க்கனவே ரஸ்புடின் குறித்து புகழ்ந்து பேசியதை கேட்ட அரசி ரஸ்புடினை தனது மற்றும் தனது மகன் வாழ்வின் மிக முக்கியமானவராக கருதினார்.அதற்க்கேற்ப்ப பிலிப்பும் ரஸ்புடினை அரசியின் வாழ்வில் ஏற்பட்டா துயர்களை களையும் வண்ணம் அவரிடம் அனுப்புகிறார்.

ரஸ்புடின் அரச குடும்பத்தின் வாரிசை தனது நோய் தீர்க்கும் ஆற்றல் மூலம் ஹீமோபீலியா நோயில் பிடியில் இருந்து விடுவிக்கிறார், இந்த நிகழ்வே அவரை அரச குடும்பத்தில் மிக முக்கிய இடம் பெற காரணமாயிற்று, 
ரஷிய அரச குடும்பம்

இந்த நிகழ்வினை குறித்து அலேக்சியின் மூத்த சகோதரி தனதுகுறிப்புகளில் இவ்வாறு எழுதி உள்ளார் :

"அவனுடைய கண்களுக்கு கீழே கருவளையம் படர்ந்து இருந்தது மேலும் அவனது சிறிய உடலும்  நோயினால் சிதைக்கப்பட்டு இருந்தது,  அவனது கால்கள் வீக்கமாக இருந்தது,மருத்துவர்கள் செய்வதறியாது தங்களுக்கு பேசிக்கொண்டு இருந்தனர்,என்னை அறைக்கு செல்லுமாறு வற்ப்புருத்தபட்டேன்,அலிக்கி(alicky )செயின்ட் பீட்டர்ஸ் பெர்கில் இருந்த ரஸ்புடினுக்கு இந்த செய்தியை அனுப்பினார்.அநேகமாக நள்ளிரவு அல்லது அதற்க்கு அதற்க்கு பிறகே ரஸ்புடின் அரசமாளிகைக்கு வந்ததாக தெரிகிறது, பிறகு விடியற்காலை அலிக்கி என்னை அலெக்சி அறைக்கு செல்லுமாறு கூறியதும் நான் அங்கு சென்ற பார்த்தபொழுது என் விழிகளை என்னால் நம்ப முடியவில்லை அலெக்சி தற்பொழுது நோயுடன் போராடவில்லை நலமுடன் காணபட்டான்,அவனது கண்கள் தற்பொழுது பிரகாசமாகவும் அவன் படுக்கையில் அமர்ந்தும் அதே சமயம் தனது பாதங்களை ஊன்றி எழுந்து நின்று பிரார்த்தனையும் கூட செய்தான் அவனிடம் நோயின் தாக்கம் இல்லாமல் இருந்தது,பிறகே அளிக்கியிடம் இருந்து அறிந்து கொண்டேன் ரஸ்புடின் அலேக்சியை தொடக்கூட இல்லை ஆனால் குணபடுத்தி  விட்டார்  "

அலேக்சியை குணப்படுத்திய இந்த நிகழ்வு ரஸ்புடினுக்கு   அரச குடும்பத்தினரிடையே மிக பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது ,