அமானுஷ்யம்: மாயத்துறவி ரஸ்புடின் -3

Saturday, January 28, 2012

மாயத்துறவி ரஸ்புடின் -3

அலேக்சியின் உயிரை காத்த ரஸ்புடினை சார் மன்னரும் அரசியும் தங்களுடன் இருக்குமாறு வேண்டிகொண்டனர், இதுவரை சாதாரண விவசாயி போல பணிவுடன் தோற்றம் கொண்டு உலாவந்த ரஸ்புடின், மாளிகைக்கு வந்த பின் உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து கொண்டார், கூடவே தன பெண் சீடர்களையும் அதிகரித்து கொண்டு அவர்களுடன் வலம் வந்தார். 

பலர் முன்னிலையில் பெண் சீடர்களுடன் சிற்றின்ப விளையாட்டுக்களில் ஈடுபட்ட ரஸ்புடின் அவர்களை ஒருவரை தேர்ந்தெடுத்து தனியே அழைத்து சென்று கூறுவது "நான் உன்னை அசுத்தபடுத்துவதாக நீ நினைக்கலாம் ஆனால் உண்மை என்னவெனில் நான் உன்னை புனிதபடுத்துகிறேன் என்பதே" ரஸ்புடின் சீடர்கள் இதனை புனிதமாக கருதினர்(the holy of hoiness)

ரஸ்புடின் தன் சீடர்களுடன்இளவரசி ஒல்கா(olga )விஷயத்தில் ரஸ்புடின் அதிக இடம் எடுத்து கொள்வதாகவும் பின்னிரவு நேரங்களிலும் கூட ரஸ்புடினை அறையில் கண்டதாக ஒல்காவின் ஆசிரியை ரஷிய அரசி அலெக்சாண்ட்ரியாவிடம்   கூறியபோது அலெக்சாண்ட்ரிய ரஸ்புடினை பாதுகாக்கும் விதமாக பேசியதன் மூலம் அலெக்சாண்ட்ரிய மேல் இருந்த ரஸ்புடின் பிடியை அறிய முடிந்தது. 

1911 - ஆம் ஆண்டுகளில் ரஸ்புடின் மீதான குற்றாசாட்டுகள் பெருமளவில் வெளியே கசிய தொடங்கியது முதன் முதலில் ரஸ்புடினை சந்தித்த பிரபு நிக்கொலோவிச் மற்றும் அவர் மனைவி ரஸ்புடினை பற்றி இந்த காலகட்டத்தில் கூறியது "மீண்டும் ஒருபோதும் அந்த தீய சக்தியை சந்திக்க விரும்பவில்லை" என கூறினார் .

ரஷிய ஆர்த்தடக்ஸ் சர்ச்சே முதன் முதலில் ரஸ்புடின் மீதான அதிகாரபூர்வ குற்ற விசாரணையை துவங்கியது, அவர்களுக்கு கணக்கற்ற ஆதாரங்கள் கிடைத்தன பாதிக்கப்பட்ட பெண்களின் வாக்குமூலம் போன்றவற்றை சேகரித்து அரசி அலெக்சாண்ட்ரியாவிடம்  சமர்பித்து ரஸ்புடின் குறித்தும் ரஸ்புடினை நம்ப வேண்டாம் எனவும் கேட்டு கொள்கின்றனர் அனால் அலெக்சாண்ட்ரியா இதனை எதையும் ஏற்க்க தயாராக இல்லை, அனைத்தையும் புறந்தள்ளினார், இந்த நிகழ்வுகள் மூலம் ரஸ்புடினுக்கும்   அரசிக்கும்  இடையே இருந்த உறவை தெளிவாக்கியது.
துறவி இலியோடர்
                                                                                                                                                 ரஸ்புடினின்  நண்பர் என குறிக்கப்படும் மற்றுமொரு துறவி இலியோடர்  (iliodar)  ரஸ்புடினின்   வரம்பு கடந்த செயல்களை அறிந்து அவரை இந்த பாதையை விட்டு விலகுமாறும் மேலும் ரஸ்புடின் ஒரு பெண் துறவியிடம் தவறாக நடந்து கொண்டதை அறிந்து வெகுண்டு அவரிடம் பெண்களை விட்டும் அரச குடும்பத்தை விட்டும் விலகி செல்லுமாறும்  சத்தியம் வாங்கியதாகவும் அதனை சரியாக ரஸ்புடின் நிறைவேற்ற வில்லை எனவும் கூறப்படுகிறது. 

ரஸ்புடின் குறித்த எந்த குற்றத்தையும் செவிமடுக்க ஜார்  அரசரும் அரசியும் தயாராக இல்லை காரணம் ரஸ்புடினை அவர்கள் துறவியாக நேசித்தனர். அரசி அலெக்சாண்ட்ரியா ரஸ்புடின் குறித்த குற்றசாட்டுகளுக்கு கூறிய பதில் "ரஸ்புடினை அவர்கள் வெறுக்க காரணம் நாங்கள் அவர் மீது அன்பு செலுத்துவதால்" என கூறினார்.

மேலும் தொடர்வோம்

1 comment:

Swapna 2v said...

hii.. Nice Post

Thanks for sharing

Celeb Saree

For latest stills videos visit ..

Post a Comment