அமானுஷ்யம்: மாயதுறவி ரஸ்புடின்

Friday, November 11, 2011

மாயதுறவி ரஸ்புடின்

ஷ்யாவின் வரலாற்றில் மறக்க முடியாத பெயர் கிரிகோரி எபீமொவிச் ரஸ்புடின் சைபீரியாவின் மேற்கு பகுதி ஒன்றின் சிறுவிவாசாயி எபீமொவிச்சிர்க்கும் அண்ணாவிற்கும் 1872  ஆம் ஆண்டு பிறந்தவர்  ரஸ்புடின் அன்றைய சைபீரியாவில் படிப்பறிவு பெற்றவர்கள் மிக சொற்பமே ஆனால் ரஸ்புடின் தந்தை கொஞ்சம் கல்வியறிவு பெற்றவர் ஆதாலால் இரவு நேரங்களில் தனது குடும்பத்தினருடன் பைபிளினை படிப்பதில் செலவிட்டார். இதன் தாக்கமே ரஸ்புடினை பிற்காலத்தில் புனித மனிதனாகவும் ,ஜார் அரசவையில் கோலோச்சவும் உதவியது.

இளம் வயது முதலாகவே ரஸ்புடினுக்கு அதிசய சக்திகள் இருப்பதாக கூறப்படுகிறது. தனது எட்டாம் வயதில் மூத்த சகோதரனை கபவாதத்தில் இழந்த துயரம் வெகுவாக ரஸ்புடினை தாக்குகிறது  ஆனாலும் அவனுடைய அசாத்திய சக்திகள் மங்கவில்லை, ஒரு சமயம் ரஸ்புடினின் தந்தையும் அவர் நண்பர்களும் கிராமத்தில் நடந்த குதிரை திருட்டு குறித்து விவாதித்த போது  தன்  படுக்கையில் இருந்து துள்ளி எழுந்த ரஸ்புடின் குறிப்பிட மனிதரை சுட்டி இவர்தான் குதிரயை  திருடியது என கூறியபோது அவனது கூற்றினை ஏற்க்க மறுத்துவிட்டனர்.பிறகு ரஸ்புடின் உறவினர்கள் இருவர் ரஸ்புடின் சுட்டிய மனிதனை ரகசியமாக கண்காணித்தபோது அவரே குற்றவாளி என அறிந்து வியந்தனர்.
ரஸ்புடின் அவனது கிராமத்தில் தனித்தவிதமாகவே வளர்ந்தான், கட்டுபாடற்ற வாழ்க்கை முறையினை மேற்கொண்டான். மிக இளம்வயதிலேயே அளவுக்கு மிஞ்சி மது அருந்தும் வழக்கம் கொண்டிருந்த ரஸ்புடின் தன வாழ்க்கையில் எத்தனை தூரம் செல்லமுடியுமோ அத்தனை தூரம் சென்றவன், மேலும் ரஸ்புடினின் மீது கிராமத்து பெண்களுக்கு இனம் புரியாத கவர்ச்சி இருந்தது. பெண்கள் மீது அதிக ஆசை கொண்டதன் விளைவாகவே தன் பத்தொன்பதாம்  வயதில் பிரஸ்கோவையா துப்ரோவினா என்ற 23  வயது பெண்ணை காதலித்து மணம் புரிந்தார்.
திருமணத்திற்கு பிறகும் ரஸ்புடினின் நடத்தையில் மாற்றம் ஏற்படவில்லை வழக்கம்போலவே குடியும் கூடவே அடாத செயலும் செய்தவாறே வாழ்ந்து கொண்டிருந்த பொது அவரது வாழ்வில் திருப்புமுனையாக அவரும் அவர் நண்பர்களும் ஒரு குதிரை  திருடிய வழக்கில் குற்றம் சாட்டபடுகின்றனர் , ரஸ்புடினுக்கு தண்டனை தரப்படவில்லை எனினும் அவரை கிராமத்தை விட்டு வெளியேறும்படியான நிலைக்கு உட்படுத்தபடுகிறார் அவ்வாறு இல்லையெனில் அவரது தந்தை 260  மைலுக்கு அப்பால் உள்ள துரவிக்கல் மடத்திற்கு யாத்திரை செல்லவேண்டுமென கூறும்போது ரஸ்புடின் தானே இந்த பயணத்தை மேற்கொள்வதாக கூறுகிறார் அப்போதைய சூழலில் அந்த பயணம் குறைந்த தண்டனை என நினைத்த ரஸ்புடினுக்கு அந்த பயணத்தின் மூலம் தன் வாழ்வின் திசை  மாறபோவதை புகழ்பெற போவதை அறியவில்லை ........


     தொடர்வோம்

No comments:

Post a Comment