அமானுஷ்யம்: மாயத்துறவி ரஸ்புடின் -1

Monday, December 19, 2011

மாயத்துறவி ரஸ்புடின் -1

ரஸ்புடினுக்கு தான் மேற்கொள்ள இருக்கும் பயணம் தன வாழ்வின் பாதையை மாற்றப்போவது அறியாமல் பயணப்படுகிறார். வேர்க்ஹோடுரி(verkhoturie ) பயணத்தில் அங்கே ரஸ்புடினுக்கு இரண்டு மிக முக்கிய சந்திப்புகள் நிகழ்கின்றன.

ஒன்று ரஷ்யாவின் புகழ்பெற்ற துறவி மகரி (makary)தனது பயணத்தின் துவக்கத்தில் முதல் மகனை இழந்த ரஸ்புடினுக்கு   மகரி" இது ஒரு வகையில் கடவுளின் முன் அறிவிப்பாக  எடுத்து கொண்டு மீண்டும் கிராமத்திற்கு செல்லும்போது மனிதாக புனிதனாக செல் " இதனை பின்பற்றும் ரஸ்புடின் மீண்டும் தனது கிராமத்திற்கு திரும்பி மது மற்றும் இறைச்சி உண்பது போன்ற வழக்கங்களை கைவிட்டு தவறாமல் பிரார்த்தனைகளில் ஈடுபடுகிறார், ரஸ்புடினின்  இந்த செய்கை மாற்றங்கள் அவரது நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் பெரும் ஆச்சர்யத்தையும் மகிழ்வையும் அளிப்பதாக உள்ளது.

அதே சமயம் ரஸ்புடின் சந்தித்த இன்னுமொரு மிக வினோதமான ரஷிய மத குழு ஸ்கொப்ட்சி (skoptsy ) இவர்களின் கொள்கை பாவத்தை செய்வதன் மூலமும் அதற்க்கான மன்னிப்பை கோருவதன் மூலமும் இறைவனை அடையலாம், மிக எளிதாக கூறுவதென்றால் கடவுளை அடைய வேண்டுமெனில் கண்டிப்பாக பாவங்கள் செய்ய வேண்டும் எனபது இவைகளின் வினோத கொள்கை.இந்த மத கொள்கைகள் ரஸ்புடினுக்கு மிக சரியாக பொருந்தி வந்தது.

தனது தற்பொழுதைய வாழ்வினை சீர்திருத்தம் செய்திருந்தாலும் முந்தைய வாழ்வு முழுவதும் பாவங்களை மட்டுமே செய்த ரஸ்புடின் இந்த வினோத மத கொள்கை படி மத குருவாக புதிய தோற்றம் கொண்ட ரஸ்புடின் வழக்கம் போலவே தனது பாவங்களை செய்தவாறே மத குருவாக மதம் குறித்து போதிக்க பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

1902 - ஆம் ஆண்டு மத குருமார்கள் ரஸ்புடினை செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் செல்லுமாறு அறிவுறுத்துகின்றனர், ரஸ்புடின் மேலும் பல செல்வந்தர்களையும் உயர்குடும்பத்தினரையும் வசப்படுத்த செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் செல்ல முடிவெடுத்தார், மேலும் ரஸ்புடின் செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் வரும் முன்னரே அவரை பற்றிய செய்திகள் அங்கே மக்களிடையே புழங்கி வந்தது.ரஸ்புடினின் நோய் குணபடுத்தும் பிரார்த்தனை மந்திரம் கிறித்துவ மற்றும் பாகன் சமயத்தில் இருந்த அசாத்திய மற்றும் மயக்கும் பேச்சுத்திறனை மேலும் வளர்த்து கொண்டார் இந்த திறமைகளை சாவியாக பயன்படுத்தியே அரச குடும்பத்தில் மிக உயர்ந்த செல்வாக்கினை பெற்றார்.

1903 -இல் செயின்ட்  பீட்டர்ஸ் பேர்க் வரும் ரஸ்புடின் தன் பேச்சாலும் போதைனையாலும் உயர்தர வகுப்பு மக்களை கவர்ந்ததன் மூலம் ரஸ்புடினுக்கு சீடர் குழாம் மேலும் விரிவடைகிறது , தன்னை ஒரு ஆன்மீக ஞானியாக குறிப்பிட்டு கொண்ட  ரஸ்புடின் " கடும் தவத்திலும் தனிமையிலும் வாழும் கடவுளின் நாயகனாகிய தனக்கு உதவுவது மூலம் குழப்பத்திலும் துன்பத்திலும் உழலும் ஆன்மாக்களுக்கு உதவுமாறு "விவரித்து கொள்கிறார்.

ரஸ்புடினின் அமானுஷ்ய சக்திகளை குறித்து மக்களிடையே பேச்சும் நம்பிக்கையும் பல உயர்தர மக்களை இணைக்க போதுமானதாக இருந்தது,உயர் வகுப்பு மக்களுக்கு இந்த கடவுளின் நாயகன் சர்ச்சில் இருப்பது அவசியமானதானது,   ஆனாலும்  ரஸ்புடினை விரும்பாத சிலர் அவர்  மதத்தை முகமூடியாக கொண்டு அதன் மூலம் மது பெண்கள் சுகம் மற்றும் பணத்தை தேடுவதாக குற்றம் சாட்டினர்.

1905 -ஆம் ஆண்டு மீண்டும் செயின்ட் பீட்டர்ஸ் பேர்க் விஜயம் செய்யும்   ரஸ்புடின் தனது ஆரம்ப கால நண்பருடன் தங்கி இருக்கும் போது
ரஷ்யாவின் பிரபு குடும்பத்தினரான  பீட்டர் நிக்கொலோவிச் மற்றும் மிளிட்சா ,சந்திக்கிறார் .  இறைவனின் அற்புதாமான அருளை பெற்ற அதே சமயம் மிகவும் வறுமையில் இருக்கும் ஒரு துறவியை சந்திபதான ஏற்பாடாக அது இருந்தது அந்த தருணத்தில் ரஸ்புடின் தனது வழக்கமான நோயினை குணப்படுத்தும் அற்புதத்தை நிகழ்த்துகிறார், பிரபுவின் குடும்பத்தினருக்கு இல்லை அவர்களின் செல்ல நாய்க்கு, மருத்துவர்களால் இரண்டு மாதம் மட்டுமே வாழும் என கூறப்பட்ட நாயின் அருகில் அமர்ந்து ஏறத்தாழ அரை மணி நேர பிரார்த்தனை செய்து ரஸ்புடின் எழும்போது நாய் கண்ணால் கண்டு உணரும் அளவு உடல் நிலை தேறி இருந்தது இந்த நிகழ்வுக்கு பின் அதே நாய் ஏறத்தாழ ஒரு வருடம் உயிர் வாழ்ந்தது   , 

No comments:

Post a Comment