அமானுஷ்யம்: சூட்சும உலகங்கள்...

Tuesday, September 14, 2010

சூட்சும உலகங்கள்...


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளமாக அமைவதுடன் சிறப்பான முடிவையும் பெற முடியும்.

தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.

சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரம்மைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் காணும் ஆற்றல் (Clairvoyance),

புலன்களுக்கு அப்பாற்பட்டதைக் கேட்கும் ஆற்றல் (Clairaudience),

கண்ணுக்குத் தெரியாத சக்தியினால் நம்முன்னே பொருட்கள் தோற்றுவிக்கப் படுத்தல் (Apports),

வெளிப்படைத் தொடர்பு இல்லாமலேயே தொலைவில் இருக்கும் பொருளை இயக்குதல் (Telekinesis),

தொடுவதன் மூலம் பொருட்களின் அல்லது உயிரினங்களின் உள்ளியல்புகளை அறிதல் (Psychometry),

மெய்மறந்த நிலையில் தாம் அறிந்திராத மொழிகளைப் பேசுதல் (Xenoglossy)

ஆகிய ஆற்றல்கள் மனிதர்களால் வெளிப்படுத்தப்படுவது இன்று விஞ்ஞானரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயமாகிவிட்டது. இந்தகைய ஆற்றல்கள் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட தோற்றங்கள் (Extra sensory Perception) என்று விஞ்ஞானம் ஏற்றுக் கொள்கிறது.

இத்தகைய இயல்புகள் நாம் வாழும் இந்த பூமியின் இயல்புகளுக்கும், விதிகளுக்கும் அப்பாற்பட்ட நாம் அறிந்திராத எதோ ஒரு விதிகளுக்கு அமைந்த செயற்பாடுகள் என்று வரையறுப்பதே பொருத்தமாக இருக்கும்.

உண்மையிலேயே இத்தகைய செயற்பாடுகள் விஞ்ஞானிகளையும் மனோதத்துவ ஆராச்சியாளைகளையும் திணறடிக்கச் செய்கின்றன என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்த செயற்ப்பாடுகளுக்கு உரிய விதிகள் அமைந்த வேறு ஒரு சூட்சும உலகங்கள், அல்லது சூட்சும தளம் (Astral Plane) இருக்கவேண்டும் என்பது இதிலிருந்து எண்ணத் தோன்றுகிறதல்லவா?

தொடரும்...

6 comments:

அண்ணாமலை..!! said...

கலக்குங்க!
எளியவனின் வாழ்த்துகள்!
:)

chandru2110 said...

ஆரம்பமே சுவாரஸ்யமா இருக்கு . அடுத்த பதிவ ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

Unknown said...

சூட்சும உலகை அறிந்திடும் ஆவல் உள்ளது தொடர்ந்திடுங்கள்.

Molagaa said...

என்ன ஒரு விளக்கம் ரொம்ப அருமையா இருக்கு தோழி , நிறைய விஷயம் இது பத்தி நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன் , தொடருங்கள் உங்க எழுத்து பணியை தடை எதுவும் வேண்டாம் .....

Praveenkumar said...

கலக்குங்க... தர்ஷி..!!

இராஜராஜேஸ்வரி said...

E S P power பற்றி மேலும் அறிந்துகொள்ள ஆவலாக
இருக்கிறோம்

Post a Comment